states

img

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு!

தெலங்கானா மாநிலத்தில் 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 20.64% வாக்குகள் பதிவாகியுள்ளன. 
தெலங்கானாவில், சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. 119 சட்டப்பேரவை தொகுதிகளில் 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரையிலும், மற்ற பகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பாஜக, எம்.ஐ.எம், சி.பி.எம்., பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளும் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 2,290 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்களில் பெண்கள் 221, ஆண்கள் 2,068, திருநங்கை ஒருவர்.
மாநிலத்தில் மொத்தம் 3.17 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 1,62,98,418 பேர். பெண் வாக்காளர்கள் 1,63,00,705 பேர், மாற்று பாலினத்தவர் 2,676 பேர் ஆவர். தேர்தலுக்காக 35,655 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 50,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 20.64% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஐதராபாத்தில் 12.39% வாக்குகளும், ரங்காரெட்டியில் 16.83% வாக்குகளும், மெட்ஷாலில் 14.74% வாக்குகளும் பதிவாகியுள்ளன.