states

பிரார்த்தனை கூட்டத்தில் குண்டுவெடிப்பு

கேரளத்தில் பெண் பலி- 52 பேர் காயம்

கேரளம் மாநிலம் களமசேரியில்  பிரார்த்தனை கூட்டத்தில் ஞாயிறன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒரு பெண் உயிரிழந்தார். 52 பேர் காயமடைந்தனர். 

கேரளம் மாநிலம் கொச்சி அரு கில் களமசேரியில் உள் ளது சாம்ரா கன்வென்ஷன் சென்டர். இங்கு யெகோவா சபையினரின் பிரார்த்தனை கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது.  சுமார் 2500 பேர் திரண்டிருந்தனர். பிரார்த்தனை கூட்டம் தொடங்கிய சற்று நேரத்தில் 9.30 மணியளவில் மண்ட பத்தின் மைய பகுதியில் பலத்த வெடிச்சத்தம் எழுந்தது. அதைத் தொடர்ந்து இருக்கைகள் தீப்பிடித்து எரிந்தன. அருகருகே மேலும் 2 இடங்களில் வெடிச்சத்தத் துடன் தீப்பிடித்தது. அரங்கின் வாயில்கள் வழியாக அனைவரும் முண்டியடித்து வெளியேறினர். அமைச்சர் பி.ராஜீவ் ஆறுதல் சம்பவ இடத்தில் தீயில் கருகி ஒரு பெண் உயிரிழந்தார். குழந்தை கள் உட்பட காயமடைந்தவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைகளிலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் அனுமதி்க்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் என்.எஸ்.உமேஷ் மற்றும் காவல் துறை, தடயவியல் துறையினர் வந்து ஆய்வு மேற்கொண்டனர். தொழில் துறை அமைச்சர் பி. ராஜீவ் சம்பவ இடத்திலும் மருத்து வமனையிலும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மருத்துவ சிகிச்சைக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து விசாரணைக்கு பிறகு தெரி விப்பதாகவும் கூறினார்.

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதி காரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்வருடன்  அமித்ஷா பேச்சு  களமசேரி குண்டுவெடிப்புக் கான காரணம் குறித்து என்ஐஏ  விசாரிக்கும் அனைத்து சாத்தியக் கூறுகளையும் ஆராய ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த  சம்பவம் குறித்து மாநில காவல் துறையிடம் ஒன்றிய அரசு முதற்கட்ட அறிக்கை கேட்டுள்ளது. ஒன்றிய  உள்துறை அமைச்சர் அமித்ஷா முதலமைச்சரிடம் பேசி னார். இந்த சம்பவத்தை தீவிரமாக எடுத்துக் கொள்வதாக முதல்வர்  பினராயி விஜயன் செய்தியாளர் களுக்குப் பதிலளித்தார். அமைச்சர் வீணா ஜார்ஜ்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறிய சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் செய்தி யாளர்களிடம் கூறுகையில், கள மசேரி குண்டுவெடிப்பில் 52 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட னர். இதில் 22 பேர் சிகிச்சை பெற்று திரும்பினர். தற்போது 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 6 பேரின் நிலை கவலைக் கிடமாக உள்ளது. திருச்சூர் மற்றும் கோட்டயம் மருத்துவக் கல்லூரி களில் இருந்து சிறப்புக் குழு எர்ணாகுளம் வந்தடைந்துள்ளது. சிகிச்சை தொடர்பான அனை த்து விசயங்களையும் ஒருங்கிணை க்கும் வகையில் மருத்துவக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

இன்று அனைத்துக்கட்சி கூட்டம் : முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு

களமசேரி குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் மாநாட்டு அரங்கில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.  அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். களமசேரியில் வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு என்பதை காவல்துறை உறுதி செய்துள்ளது. அதை தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அனைத்து முக்கிய இடங்களிலும் 24 மணி நேர போலீஸ் ரோந்து உறுதி செய்யப்பட வேண்டும். வணிக வளாகங்கள், சந்தைகள், மாநாட்டு மையங்கள், சினிமா தியேட்டர்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சுற்றுலா  மையங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர சோதனை நடத்த வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.