states

img

குக்கி அமைப்புடன் மோடி அரசு பேச்சுவார்த்தை நடத்துவதா

குக்கி அமைப்புடன் மோடி அரசு பேச்சுவார்த்தை நடத்துவதா

மெய்டெய் அமைப்பு போர்க்கொடி; மணிப்பூரில் மீண்டும் பதற்றம்

பாஜகவின் வகுப்பு வாத அரசிய லால் (மெய்டெய்  - குக்கி அமைப்புகளுக்கு இடையே மோதலை தூண்டி  விட்டது) மணிப்பூர் மாநிலம்  கடந்த 2023ஆம் ஆண்டு முதல் இன்று வரை வன் முறை பூமியாக காட்சி அளித்து வருகிறது. அறிவிக்  கப்படாத ஊடக கட்டுப்பாடு இருப்பதால் வன்முறைச் சம்பவங்கள் சரிவர வெளி வருவதில்லை. எனினும் மணிப்பூரில் வன்முறைக்கு 250க்கும் மேற்பட்டோர் உயி ரிழந்துள்ளனர். பல லட்சம்  மக்கள் சொந்த மாநிலத்தி லேயே அகதிகளாக வாழ்ந்து  வருகின்றனர். இதனால் அங்கு பாஜக ஆட்சி கவி ழ்க்கப்பட்டு தற்போது வரை குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கிறது. இதனிடையே கடந்த வாரம் தில்லியில் குக்கி -  ஸோ (பழங்குடி மக்கள்)  கவுன்சில் பிரதிநிதிகளுக் கும், மணிப்பூர் அரசுக்கும் (குடியரசுத் தலைவர் கட்டுப்  பாடு), ஒன்றிய உள்துறை  அமைச்சக அதிகாரிகளுக் கும் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற் றது. இந்த பேச்சுவார்த்தை வியாழனன்று இறுதி முடிவு எட்டப்பட்டதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்து,”பொது போக்கு வரத்துக்கும், அத்தியவா சியப் பொருட்கள் மாநி லத்துக்குள் வந்து செல்வதற்  கும் தேசிய நெடுஞ்சாலை  எண் 2-ஐ திறந்துவிட உடன்  பாடு எட்டப்பட்டுள்ளது. குக்கி - ஸோ கவுன்சிலும், பாதுகாப்புப் படையின ரும் முழு ஒத்துழைப்பு தர முன்வந்துள்ளனர்” என அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், குக்கி அமைப்புடன் மோடி அரசு  பேச்சுவார்த்தை நடத்து வதா? என கடும் எதிர்ப்பு தெரி வித்து மெய்டெய் அமைப்பு  போர்க்கொடி தூக்கியுள் ளது. இதுதொடர்பாக மெய்டெய் போராட்டக்குழு வினர் வெளியிட்டுள்ள அறிக்  கையில்,”மணிப்பூரில் குக்கி  அமைப்புடன் ஒன்றிய அரசு நடத்திய பேச்சுவார்த்தை மிக மோசமானது. அதே போல ஒன்றிய அரசின் ஒரு  தலைப்பட்சமான இந்த முடிவை ஏற்க முடியாது” எனக் கூறியுள்ளனர். மெய்  டெய் குழுவினர் சமரச  முயற்சியை நிராகரித்துள்ள தால் மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகி யுள்ளது.

எல்லாம் மோடிக்காக?

வன்முறை வெடித்த நாள் முதல் இன்று வரை 2 ஆண்டுக்கு மேலாக பிரதமர் மோடி மணிப்பூர் செல்லவில்லை. “இந்தியா” கூட்டணி தலைவர்கள் மட்டுமே  பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வரு கின்றனர்.  இந்நிலையில், செப்டம்பர் மாதம் 2ஆவது வாரத்தில் பிரதமர் மோடி மணிப்பூர் செல்லவிருப்பதாகக் கூறப்படு கிறது. ஆனால் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. பிரதமர் மோடி மணிப்பூர் செல்ல உள்ளதாக செய்தி வெளியான சில மணிநேரங்களில் குக்கி  அமைப்புடன் பேச்சு நடத்தப்பட்டதாகவும், தேசிய நெடுஞ்சாலை எண் 2-ஐ திறந்துவிட உடன்பாடு எட்டப்பட்  டுள்ளதாகவும் அமித் ஷா கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இதன்மூலம் மோடிக்காகவே தேசிய நெடுஞ்சாலை எண் 2 திறக்கப் பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.