states

கோதுமை கொள்முதல் மே 31 வரை நீடிப்பு

புதுதில்லி, மே 16-  உக்ரைன் - ரஷ்ய போரால் அதிக அளவு  கோதுமை உற்பத்தி நடைபெறும் உக்ரைனில்  ஏற்றுமதி தேங்கியுள்ளது. இதற்கிடையே அண்டை நாடுகளின்  தேவைக்காக இந்தியா வின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் 1 கோடி டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு இலக்கு நிர்ண யித்துள்ள நிலையில், இதுவரை 9,63,000 டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கோதுமை ஏற்றுமதிக்கு சமீபத்தில் ஒன்றிய அரசு தடை விதித்தது.  போதிய அளவு கோதுமையை ஒன்றிய அரசு  கொள்முதல் செய்யத் தவறியதே இதற்குக் காரணம்.  கொள்முதல் நடந்திருந்தால், கோதுமை ஏற்றுமதியை தடை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்று விமர்சனங்கள் எழுந்தன.  இந்நிலையில், விவசாயிகளிடமிருந்து கோதுமை கொள்முதல் செய்வது மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உணவு  மற்றும் பொதுவிநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று கோதுமை கொள்முதல் மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது’ என்றார். இந்த நீட்டிக்கப்பட்ட காலம் விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்று கூறினார்.

;