“கல்வான் பள்ளத் தாக்கு பகுதியில் சீன ராணுவம் தனது தேசியக் கொடியை ஏற்றியது குறித்து பிரதமர் மோடி மவுனம் கலைக்க வேண் டும்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார். இந்நிலையில், “இந்திய ராணுவம் நிலைமையைக் கையாண்டு வருகிறது. அங்கு சீனாவுக்கு தகுந்த பதி லடி கிடைத்து வருகிறது. பாங்காங் ஏரியில் பாலம் கட்டுவது உள்பட சீனா ஏதாவது அத்துமீறினால் நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம்” என்று வெளியுறவுத் துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி பதில ளித்துள்ளார்.