பரலோகத்தில் இருப்பவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை
சிபிஎம் எம்.பி., சு.வெங்கடேசன் கண்டனம்
பரலோகத்தில் இருப்பவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை தேர்தல் ஆணையம் அளித்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் மேலும் கூறுகையில்,”பீகாரின் சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் சிவான் (Siwan) தொகுதியில் 124 வயதான திருமதி மிண்டா தேவி வாக்களிக்க உள்ளார். இது வெறும் எழுத்தர் பிழை அல்ல. மெகா மோசடியின் சான்று. பரலோகத்தில் இருப்பவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கிய தேர்தல் ஆணையமே! நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் கேட்கிறோம். பதில் சொல்” என கேள்வி எழுப்பியுள்ளார்.