states

img

கர்நாடகாவின் நிலத்தடி நீரில் யுரேனியம் அளவு அதிகரிப்பு

கர்நாடகாவின் நிலத்தடி நீரில் யுரேனியம் அளவு அதிகரிப்பு 

ஆய்வுக் கட்டுரையில் தகவல்

பெங்களூரு கர்நாடகாவின் கிழக்கு பகுதி களில் உள்ள குடிநீரில், யுரேனியத்தின் அளவு அதிகமாக இருப்பதாக ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  சுற்றுச்சூழல் அறிவியல் & தொழில்நுட்பம் என்ற அறிவி யல் இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் இந்த தகவல் வெளி யிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆய்வு செய்யப்பட்ட நிலத்தடி நீரில் 78 சதவீதமான மாதிரிகளில், யுரே னியத்தின் அளவு அனுமதிக்கப் பட்ட பாதுகாப்பான அளவை விட மிக அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.  மேலும், சில இடங்களில், யுரேனியத்தின் அளவு அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் ஆகிய வற்றின் வரம்புகளை விட 75 மடங்கு அதிகமாகவும் இருந்தது கண்டறி யப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்காக, கர்நாடகா வின் கிழக்கு மண்டலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் இருந்து 46 ஆழ்துளைக் கிணறு களின் நீர் மாதிரிகள் சேகரிக் கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட் டுள்ளது. இந்த நீர் மாதிரிகளில், யுரேனியத்தின் அளவானது லிட்டருக்கு 1.9 முதல் 2744 மைக்ரோகிராம் வரை இருந்தது. இது தேசிய மற்றும் சர்வதேச பாது காப்பு வரம்புகளை விட மிகவும் அதிகமாகும். ஆராய்ச்சியாளர்கள் கூறுகை யில், நிலத்தடி நீரில் யுரேனியத்தின் அளவானது அனுமதிக்கப்பட்ட வரம்புகளை விட அதிகரிக்கும் போது அது மக்களுக்கு மிக ஆபத்தான விசயமாக மாறும். யுரேனியம் கலந்த தண்ணீரை குடிக்கும் போது அது உடலில் கலந்து  சிறுநீரகம், எலும்புகள் மற்றும் கல்லீரலை பாதிக்க துவங்கும். தற்போது தண்ணீரில் கலந் துள்ள அதிக அளவிலான யுரேனிய மானது அணுவுலை அல்லது வேறு நிறுவனங்கள் மூலமாக ஏற்பட வில்லை. அது இயற்கையாகவே நிலத்தில் இருந்து வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வெளிவந்துள்ள இந்த ஆய்வானது யுரேனியத்தின் அளவு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களைக் கண்காணிக்க ஒரு உறுதியான மற்றும் நீண்ட கால கண்காணிப்பு வலையமைப்பின் அவசரத் தேவையை வலியுறுத்து கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தண்ணீரில் அதிக ஆக்சிஜன் இருக்கும்போது அதில் யுரேனியம் கரைந்து நீருடன் சேர்ந்து விடும். ஆனால் ஆழமாக நிலத்தடி நீரில் உள்ள சில பாக்டீரியாக்கள் இரும்பு ஆக்சைடுகளைச் சிதைக் கும்போது நிலத்தடி நீரில் ஆக்சி ஜன் இல்லாமல் போய்விடும். அப்போது யுரேனியம் கரையாமல் திண்மமாகப் படிந்துவிடும்.  அதே போல நீரில் உள்ள யுரேனியம் ஐசோடோப்புகளின் விகிதம் ஒரு கைரேகையைப் போ லச் செயல்படுகிறது. அது யுரேனி யம் எங்கிருந்து நீரில் நுழைகிறது, எங்கிருந்து வெளியேறுகிறது, அது அருகிலுள்ள மூலத்தில் இருந்து வருகிறதா அல்லது வேறு இடத்தில் இருந்து வருகிறதா? என்பதைக் கண்டறிய உதவுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.