states

img

சொற்ப வாக்குகளில் 28 தொகுதிகளை இழந்த சமாஜ்வாதி கட்சி!

லக்னோ, மார்ச் 14 - உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வென்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 273 இடங்களில் பாஜக கூட்டணி வென்றது. இதில் பாஜக மட்டும் 255  இடங்களிலும், அப்னாதள் (சோனே லால்) 12 இடங்களிலும், நிஷாத் கட்சி  6 இடங்களிலும் வென்றுள்ளன.  முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ் வாதி 111 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான ராஷ்டிரிய லோக் தளம் 8 இடங்கள், சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி 6 இடங்கள் என மொத்தம் 125 இடங்களைக் கைப்பற்றியுள்ளன. இதனிடையே, சமாஜ்வாதி கட்சி  28 தொகுதிகளில் சொற்ப  வாக்குகள்  வித்தியாசத்தில் தோற்றிருப்பதும், அசாதுதீன் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி மட்டும் 7 தொகுதிகளில் சமாஜ்வாதியின் வெற்றிவாய்ப்பைக் கெடுத்து, பாஜக-வின் வெற்றிக்கு  வழிவகுத்திருப்பதும் தெரியவந்துள் ளது.

தம்பூர் தொகுதியில், சமாஜ்வாதி  வேட்பாளர் நயீம் உல் ஹசன், வெறும் 203 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் அசோக் குமார்  ராணாவிடம் தோற்றுப் போயுள்ளார்.  பாரங்கி மாவட்டம் குர்சி தொகுதி  சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ராகேஷ்  வர்மாவும், 217 வாக்குகள் வித்தியாசத் தில் பாஜக-வின் சாகேந்திர வர்மா விடம் வெற்றியைப் பறிகொடுத் துள்ளார்.  சமாஜ்வாதியின் கூட்டணியி லுள்ள ஆர்எல்டி கட்சியின் வேட்பா ளர்கள் பிஜ்னோரில் 1,445, பரவுத்தில்  325, நஹதவுரில் 258 வாக்குகள் வித்தி யாசத்தில் பாஜக வேட்பாளர்களிடம் தோற்றுப் போயுள்ளனர். இப்படி யாக மொத்தம் 28 தொகுதிகளில்  இருநூறு முதல் அதிகபட்சம் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திற்குள் தோற்றுள்ளனர். இதேபோல பாஜக மற்றும் அதன்  கூட்டணி கட்சிகள் 18 தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் சமாஜ்வாதியிடம் வாய்ப்பை இழந்தி ருந்தாலும், சமாஜ்வாதி கட்சியே அதிகபட்சமான பாதிப்பை சந்தித்துள் ளது.

இது ஒருபுறமிருக்க, நாகூர், குர்சி,  முபாரக்பூர், மொராதாபாத் நகர் உள்ளிட்ட பல இடங்களில், சமாஜ் வாதி கட்சியின் தோல்விக்கு அசாது தீன் ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி கார ணமாகி இருக்கிறது. மொராதாபாத் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ரித்தேஷ் குமார்  குப்தா 782 வாக்குகள் வித்தியாசத் தில் சமாஜ்வாதியின் முகமது யூசுப்  அன்சாரியை தோற்கடித்தார் என்றால், இங்கு ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி வேட்பாளர் வாக்கி ரஷீத் பெற்ற வாக்குகள் 2 ஆயிரத்து 661  ஆக உள்ளது. அதுமட்டுமன்றி இங்கு  பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் இர்ஷாத் உசேன் 14 ஆயிரத்து 013  வாக்குகளும், காங்கிரசின் ரிஸ்வான் குரேஷி 5,351 வாக்குகளையும் பிரித் துள்ளனர். குர்சி சட்டமன்றத் தொகுதியான பாரபங்கியில், பாஜக எம்எல்ஏ சாகேந்திர பிரதாப் வர்மா, 217 வாக்கு கள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி வேட்பாளர் ராகேஷ் குமார் வர்மாவை தோற்கடிக்க, ஒவைசி கட்சியின் குமாயில் அஷ்ரப் கான் இங்கு 8  ஆயிரத்து 541 வாக்குகளை பிரித்துள் ளார். 

சஹாரன்பூரின் நாகூர் தொகுதி யில், சமாஜ்வாதி கட்சியின் டாக்டர் தரம் சிங் சைனி வெறும் 315 வாக்கு கள் வித்தியாசத்தில், பாஜக வேட்பா ளர் முகேஷ் சவுத்ரியிடம் தோல்விய டைந்துள்ளார். இங்கு ஒவைசி கட்சி யின் ரிஸ்வானா பெற்ற வாக்குகள் 3  ஆயிரத்து 593. ஜான்பூரின் ஷாகஞ்ச் தொகுதி யில், சமாஜ்வாதி கட்சியின் சைலேந் திர யாதவ் லலாய் 719 வாக்குகள்  வித்தியாசத்தில் தோல்வியடைந் தார். இங்கு ஒவைசி கட்சியின் வேட்பா ளர் நயாப் அகமது கான் 8 ஆயிரத்து  128 வாக்குகள் பெற்றுள்ளார். சுல்தான்பூர் சதார் தொகுதியில், பாஜக வேட்பாளர் வினோத் சிங்- கிற்கும், சமாஜ்வாதி கட்சியின் அனூப் சந்தாவுக்கும் இடையேயான வித்தி யாசம் 1,009 வாக்குகள் மட்டுமே. இங்கு ஒவைசி கட்சி வேட்பாளர் மிர்ஜா அக்ரம் பெற்றது 5 ஆயிரத்து 251 வாக்குகள். பதோஹியின் அவுராய் தனித் தொகுதியில் பாஜக எம்எல்ஏ தீனந்த் பாஸ்கர் 1,647 வாக்குகள் வித்தி யாசத்தில் சமாஜ்வாதி வேட்பாளர் அஞ்சனி சரோஜை தோற்கடித்தார். இங்கு ஒவைசி கட்சி வேட்பாளர் டெதாய் பெற்ற வாக்குகள் 2 ஆயி ரத்து 190.

பிஜ்னோர் தொகுதியில், பாஜக வேட்பாளர் சுசி, ஆர்எல்டியின் நீரஜ்  சவுத்ரியை 1,445 வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெற்றார். இங்கு ஒவை சியின் முனீர் அகமது 2 ஆயிரத்து 290  வாக்குகளை பிரித்துள்ளார். சுல்தான்பூரின் இசௌலி தொகுதியில் சமாஜ்வாதி வேட்பா ளர் பெற்ற வெற்றி வித்தியாசம் வெறும்  269 மட்டுமே. ஒவைசி வேட்பாளர் பெற்றதோ 3 ஆயிரத்து 308. கொஞ்சம்  பிசகியிருந்தாலும் இங்கு பாஜக வெற்றி பெற்றிருக்கும். பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள  ராணிகஞ்ச் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் ராகேஷ் குமார் வர்மா 2  ஆயிரத்து 649 வாக்குகள் வித்தியாசத் தில் தப்பினார். ஏனெனில் இங்கு ஒவைசி கட்சி வேட்பாளர் அனில் குமார் பெற்ற வாக்குகள் 11 ஆயி ரத்து 748. இதேபோன்ற கதைதான், ராம் நகர் மற்றும் டோமரியகஞ்ச் ஆகிய இடங்களிலும் அரங்கேறியுள் ளது. 

ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி மொத்தம் 95 தொகுதிகளில் போட்டி யிட்டு, 4.51 லட்சம் (0.49 சதவிகிதம்) வாக்குகளைப் பெற்றாலும், ஓரிடத் தில் கூட வெற்றிபெற முடியவில்லை.  94 இடங்களில் டெபாசிட் இழந்தது. எனினும், எதிர்க்கட்சிகளின் வெற்றி யைப் பறித்து, பாஜக-வுக்கு உதவி செய்துள்ளது. பாஜக-வை எதிர்க்கிறேன் என்று அசாதுதீன் ஒவைசி கூறினாலும், எதிர்க்கட்சிகளுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளைப் பிரித்து, தொடர்ந்து பாஜக-வின் வெற்றிக்கே உதவி வருகிறார். முன்பு, பீகார், மகாராஷ்டிரா மாநிலங்களில் காட்டிய  இந்த வேலையை, தற்போது உத்தரப்  பிரதேசத்திலும் அவர் அரங்கேற்றி யுள்ளார்.