states

வரதட்சணையைப் போற்றிப் புகழும் ஒன்றிய அரசின் நர்சிங் பாடத்திட்டம்

புதுதில்லி, ஏப். 5 - சட்டத்தின் படி வரதட்சணை தடை  செய்யப்பட்டுள்ளது. அதனை வாங்கு வதும், கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றங்கள் ஆக்கப்பட்டுள்ளது. இடது சாரிகள் ஆளும் கேரளத்தில் அரசு ஊழி யர்களாக இருப்பவர்கள், வரதட்ச ணை வாங்கவில்லை என்று சான்றிதழ் அளிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள் ளது. வரதட்சணை ஒழிப்புக்கெனவே சிறப்புச் சட்டங்களும் கொண்டுவரப் பட்டு உள்ளன. இவ்வாறு வரதட்சணைக்கு எதிராக நீண்ட நெடிய பிரச்சாரம், போராட்டங் கள் நடந்து வரும் நிலையில், ‘இந்திய நர்சிங் கவுன்சில்’ (Indian Nursing Council) பாடத்திட்டத்தில், ‘வரதட்ச ணை எந்தெந்த வகையிலெல்லாம் நல் லது’ என்று வியாக்ஞானம் செய்யப்பட்டு இருப்பது பெண்களுக்கும், பெண்ணி யவாதிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டி.கே. இந்திராணி என்பவர்தான் ‘செவிலியர்களுக்கான சமூகவியல் பாடநூல் (‘Textbook of Sociology for Nurses’) என்ற தலைப்பில் இந்த பாடத்தை வடிவமைத்துள்ளார்.  

அந்த பாடம், ஒரு புதிய குடும்பத்தை அமைப்பதற்கு வரதட்ச ணை எவ்வாறு உதவுகிறது மற்றும் ஒரு வீட்டில் உபகரணங்கள், பாத்திரங்கள் மற்றும் துணிகளை வாங்குவதற்கு எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கு வதாக தொடங்கி, “குடும்பச் சொத்தில் பெண்கள் அவர்களுக்குரிய பங்கினைப் பெற வரதட்சணை என்பது மறைமுக வழி செய்கிறது” என்றெல்லாம்வாதிடுகிறது. அடுத்த கட்டமாக, பெண் கல்வியை  வரதட்சணை எவ்வாறு ஊக்குவிக்கிறது என்பதைப் பற்றி பேசுகிறது. “வரதட்ச ணையால்தான் பெண்கள் கல்வி பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. அதாவது நன்கு படித்து, உத்தியோகம் செல்லும் பெண் கள் என்றால், அதிக வரதட்சணை கொடுக்க வேண்டியது இருக்காது என்ப தால், பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் மகள்களை படிக்க வைக்க முன்வந்துள்ளனர். எனவே, “பெண் கல்வியை வரதட்சணை மறைமுகமாக  ஊக்குவிக்கிறது” என்று கூறுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக “அசிங்க மான தோற்றம் கொண்ட பெண்கள் கூட கவர்ச்சிகரமான வரதட்சணை கொடுத்து அழகான ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது” என்ற புளகாங்கிதப் பட்டுள்ளது. இது தற்போது சமூகவலைதளங் களில் கடும் விவாதத்திற்கு உள்ளாகி  இருக்கிறது. அசிங்கமான பெண்கள் அதிக வரதட்சணை கொடுக்க வேண்டும் என்பது போன்ற பிற்போக்கான கருத்து களை மாணவர்கள் மனத்தில் விதைக்கும் இந்த பாடத்திட்டத்தை நீக்க வேண்டும் என்று கண்டனங்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, மாணவர்களுக்கு ‘வரதட்சணை’ பற்றிய மிகவும் தவறான புரிதலை ஏற்படுத்தும் பாடத்திட்டம் குறித்து, உடனடியாக தலையிட்டு தீர்வு  காணுங்கள் என்று, ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதா னுக்கு, தேசிய மகளிர் ஆணையத் (The National Commission for Women  - NCW) தலைவர் ரேகா ஷர்மா கடிதம் எழுதியுள்ளார்.