states

img

கர்னல் சோபியா குறித்து  மதவெறிக் கருத்து வழக்குப் பதிய  உத்தரவிட்ட நீதிபதியை இடம் மாற்றிய ஒன்றிய அரசு

கர்னல் சோபியா குறித்து  மதவெறிக் கருத்து வழக்குப் பதிய  உத்தரவிட்ட நீதிபதியை இடம் மாற்றிய ஒன்றிய அரசு

கர்னல் சோபியா குரேஷி மீது மத வெறிக் கருத்துகளை வீசிய பாஜக அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தர விட்ட நீதிபதி ஒன்றிய அரசின் பரிந்துரை யால் இடமாற்றம் செய் யப்பட்டுள்ளார்.  ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் பங் கேற்ற முக்கிய ராணுவ அதிகாரியாக கர்னல் சோபியா குரேஷி விளங்கினார். இவர் முஸ்லிம் என்பதால் பயங்கரவா தத்தின் சகோதரி என மத்தியப் பிரதேச பழங்குடியினர் துறை அமைச்சர் விஜய் ஷா இவரையும் பாகிஸ்தான் பயங்கரவா திகளையும் தொடர்புபடுத்தி மதவெ றுப்பை தூண்டும் வகையில் பேசினார்.  கடந்த மே மாதமே இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி அதுல் ஸ்ரீதரன், அமைச்சர் விஜய்ஷா மீது நான்கு மணி நேரத்துக்குள் வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று டிஐஜிக்கு உத்தரவிட்டிருந்தார்.  இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடை பெற்று வரும் நிலையில், நீதிபதி அதுல் ஶ்ரீதரன் ஒன்றிய அரசின் வேண்டுகோ ளின்படி, அலகாபாத் உயர்நீதிமன் றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள் ளார். இந்திய ஒற்றுமைக்கு ஆதரவாக இருப்பவர்களை ஒன்றிய பாஜக அரசு  தனது அதிகாரத்தின் மூலம் பழிவாங்குகி றது  என விமர்சனங்கள் எழுந்துள்ளன.