2.17 லட்சம் கள்ள நோட்டுக்கள் ஒன்றிய அரசு தகவல்
கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 2.17 லட்சம் எண்ணிக்கையிலான பல்வேறு மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகள் கண்டறியப்பட்டுள் ளன என ஒன்றிய அரசு தெரிவித்துள் ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டால் கள்ள நோட்டுகளை ஒழிக்க முடியும். இந்திய பொருளாதாரம் உயரும். பயங்கரவாதத்தை அழித்து விடலாம் என பிரதமர் மோடி 2016 ஆம் ஆண்டில் பேசினார். ஆனால் பண மதிப்பிழப்பிற்கு பிறகு பொருளாதார நெருக்கடியும் கள்ளநோட்டுக்களின் புழக்கமும் அதிகரித்தது. இதனால் கடந்த ஆண்டு 2000 ரூபாய் நோட்டுக்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது. புல்வாமா,பஹல்காம் என நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையிலான பயங்கரவாதத் தாக்கு தல்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் ஆண்டு தோறும் பல லட்சம் கள்ள நோட்டுகள் பிடிபடும் நிலை யில் கடந்த நிதி ஆண்டில் கண்டறியப் பட்ட கள்ள நோட்டுகள் குறித்து மக்கள வையில் நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்து மூலம் அளித்த பதிலில் 2024-25 ஆம் நிதியாண்டில் 2.17 லட்சம் எண்ணிக்கையிலான பல்வேறு மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகள் கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த 2.17 லட்சம் கள்ள நோட்டுக ளில் 1,17,722 நோட்டுகள் ரூபாய் நோட்டு கள் எனவும் 51,069 நோட்டுகள் 100 ரூபாய் நோட்டுக்கள் எனவும் 32,660 நோட்டுகள் 200 ரூபாய் நோட்டுக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.