states

ஜீ தமிழ் டி.வி-க்கு ஒன்றிய அரசு நோட்டீஸ்

புதுதில்லி,ஜன.18- சிறுவர்கள் நிகழ்ச்சி மூலம் பிரதமரை  விமர்சனம் செய்ததாக  ஜீ தமிழ் தொலைக் காட்சிக்கு ஒன்றிய தொலைத்தொடர்பு அமைச்சகம்  நோட்டீஸ் அனுப்பி, 7 நாட்களில் விளக்கம் அளிக்குமாறு தெரிவித்துள்ளது. தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் சேனலில், குழந்தைகள் மட்டும் பங்கேற்கும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் ஷோ  நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஒன்றிய பாஜக அரசையும்  பிரதமர் மோடியையும் விமர்சிக்கும் வகையில்  அமைக்கப்பட்டிருந்ததாக பாஜகவினர்  ஆத்திரமடைந்தனர். இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஒன்றிய  அமைச்சருக்கு டிவிட் செய்து புகார் அளித்தார். அதை யடுத்து, ஒன்றிய  இணை அமைச்சர்  முருகன்  நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தததாக கூறப்பட்டது. இந்த நிலையில்,ஒன்றிய தகவல்-தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம், ஜீ தமிழ் சேனலுக்கு நிகழ்ச்சி குறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், 15.01.2022 அன்று ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனலில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை  ஒளி பரப்பியதற்கு எதிராக இந்த அமைச்சக த்திற்கு புகார் வந்துள்ளது என்பதை உங்க ளுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். புகாரின் சாரம் இத்துடன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக 7 நாட்களுக் குள் இந்த அமைச்சகத்திடம் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள் ளது. தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டிக்கும் விமர்சிக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் குறித்து அவதூறாக பேசி வரும் பாஜகவினரை கட்டுப்படுத்த நட வடிக்கை எடுக்காமல், கருத்துச் சுதந்தி ரத்தை பறிக்கும் வகையில் இதுபோன்ற நோட்டீஸ் அளிப்பு நடவடிக்கைளை கண்டிப்பதாக அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.