states

img

ஒமிக்ரான் பரவல்: கண்காணிப்பு,பரிசோதனையை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

புதுதில்லி,நவ.28- போட்ஸ்வானா, தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங், இஸ்ரேல், பெல்ஜியம் என பல நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளது. ஒமிக்ரான் என்ற புதிய உருமாற்றம் அடைந்த   வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ள நாடுகளுக்கு பயணத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதிகளை கண்காணிக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பரிசோதனை தீவிரப்படுத்தி, கண்காணிப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றும் தேவை ஏற்பட்டால் தனிமைப்படுத்தப் பகுதிகளை உருவாக்க வேண்டும், தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த வேண்டும் என்றும் மாநிலங்களை ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. போதுமான பரிசோதனைகள் இல்லாத நிலையில், தொற்றுப் பரவலின் உண்மையான அளவைக் கண்டறிவது மிகவும் கடினம் என்று மாநில அரசு களுக்கு சுகாதார அமைச்சகம்  கடிதம் எழுதியுள்ளது. சில மாநிலங்களில் ஒட்டுமொத்த பரிசோதனை மற்றும் ஆர்டி-பிசிஆர் சோதனைகளின் விகிதம் குறைந்துவிட்டதாக எச்சரித்துள்ள சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், நவம்பர் 28-ஆம் தேதியன்று, ஒமிக்ரான் வைரஸால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க போதுமான சோதனை உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.