states

img

நவம்பர் 3இல் நாடாளுமன்றம் நோக்கி பேரணி

புதுதில்லி, ஜுலை 17- வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிறுவன தினமான நவம்பர் 3ஆம் தேதி ஆயிரக்கணக் கான மக்களைத் திரட்டி நாடாளுமன்றத்திற்கு பேரணியாகச் செல்வதென தில்லியில் நடந்த அந்த அமைப்பின் மத்தியக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்தியக்குழ கூட்ட முடிவுகைள விளக்கி சங்கத்தின் அகில இந்திய தலை வர் ஏ.ஏ.ரஹீம் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: நாடாளுமன்றம் நோக்கி நடக்கும் அணிவகுப்பை ஊக்குவிக்கும் வகையில் செப்டம்பர் 15ஆம் தேதியை அகில இந்திய உரிமைகள் தினமாக அனுசரிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆகஸ்ட்  1 முதல் செப்டம்பர் 10 வரை தீவிர அடிமட்ட  பிரச்சாரம் நடத்தப்படும்.

சுதந்திர தினத் தன்று, நாட்டில் ஜனநாயகம், மதச்சார் பின்மை காப்போம் என்ற முழக்கத்துடன் மாநிலங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அக்.2 காந்தி ஜெயந்தி நாளில், வட்டார  மையங்களில் நடைபயண ஊர்வலம் நடத்தப்படும். அன்று முதல், அக்., 25ஆம்  தேதி வரை, கருத்தரங்குகள், போராட்டங் கள், கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடு செய்யப்படும். இதன் ஒரு பகுதியாக மாநில அளவிலான பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். அக்னிபாதை திட்டத்திற்கு எதிரான போராட்டம் மிகப்பெரிய வெற்றி என்றும் கூட்டத்தில் மதிப்பிடப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைமையில் உருவான இடதுசாரி இளை ஞர் மாணவர் அமைப்புகளின் கூட்டணி வலுப்பெறும். ஜூலை 15, 16 ஆம் தேதி களில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமுக்கு நிதி சேகரிக்கப்படும். கிசான் மோர்ச்சா தலைமையில் அக்னிபாதை திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் முன் னோடியாக ஜூலை 19ஆம் தேதி நடை பெறவுள்ள கூட்டத்தில் தனக்கு அழைப்பு வந்துள்ளதாகவும் அதில் பங்கேற்க உள்ளதாகவும் ஏ.ஏ.ரஹீம் தெரிவித்தார்.