states

5ஜி ஸ்பெக்ட்ரம் அடிப்படை விலையை 40 சதவீதம் வரை குறைக்க டிராய் பரிந்துரை

புதுதில்லி,ஏப்.12- அதிக போட்டியை ஈர்க்க 5ஜி ஸ்பெக்ட்ரம்  அடிப்படை விலையை 40 சதவீதம் வரை குறை க்க வேண்டும் என்று இந்திய தொலைத்தொ டர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) பரிந்துரை செய்துள்ளது.  700 மெகா ஹெர்ட்ஸ் (MHz) அலைவரி சையின் விலையில் 40 சதவிகிதம் குறைப்பு மற்றும் 3300-3670 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் 36 சதவிகிதம் குறைக்க ஒன்றிய அரசிடம் பரிந்துரை  செய்துள்ளது. பல்வேறு பேண்டுகளின் இருப்பு விலை  கடந்த முறை பரிந்துரைத்ததை விட கிட்டத்தட்ட 39 சதவீதம் குறைவாக இருக்கும்.  இது ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா போன்ற முக்கிய டெலிகாம் நிறு வனங்களின் போட்டி ஏலத்தை ஈர்க்கும் என டிராய் கருதுகிறது. தனியார் தொலைத் தொடர்பு வழங்குநர்களால் 2022-23 ஆம் ஆண்டுக்குள் 5 ஜி மொபைல் சேவைகளை வெளியிடுவதற்கு வசதியாக, ஸ்பெக்ட்ரம் ஏலம் இந்த ஆண்டு நடத்தப்பட உள்ளது. 5 ஜி அதிவேகத்தில் புதிய சேவைகள் மற்றும் வணிக மாதிரிகளை வழங்கும்.

இதுகுறித்து பரிந்துரைகளை வெளி யிட்ட டிராய், தற்போதுள்ள 700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ்,  2500 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் புதிய ஸ்பெக்ட்ரம் 600 மெகா ஹெர்ட்ஸ், 3300-3670  மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 24.25-28.5 ஜிகா ஹெர்ட்ஸ் (GHz) அலைவரிசைகளில் உள்ள அனைத்து ஸ்பெக்ட்ரம்களும் ஏலத்தில் விடப்படும் என்று தெரிவித்துள்ளது. தொலைத்தொடர்புத் துறையின் நீண்ட கால வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை, பணப் புழக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் முத லீட்டை ஊக்குவிப்பதற்காக, தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்கள் நெகிழ்வுத் தன்மையுடன் பகுதி கட்டணம் உட்பட எளி தான கட்டண விருப்பங்களை அனுமதிக்க வேண்டும் என்று டிராய் தெரிவித்துள்ளது.