states

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்த முப்படையின் விசாரணை அறிக்கை தாக்கல்

புதுதில்லி, ஜன.5-  குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்த  முப்படையின் விசாரணை அறிக்கையை ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையிலான முப்படையின் குழு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தாக்கல் செய்தது.  நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த நச்சப்பசத்திரம் பகுதியில் கடந்த டிசம்பர் 8ம் தேதி எம்ஐ 17 ரக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் இதர 12 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர்.  விபத்து குறித்து தமிழ்நாடு காவல்துறை யினர் தனியாக வழக்குப்பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரிக்க ஏர் மார்ஷல் மனவேந்திரா சிங் தலைமையில் முப்படை அதிகாரிகள் அடங்கிய குழுவை ஒன்றிய அரசு அமைத்தது. விபத்து நடந்த பகுதியில் கறுப்புப் பெட்டி மற்றும் ஹெலிகாப்டரில் உதிரி பாகங்களை மீட்டு இந்த குழுவினர் ஆய்வு செய்தனர். தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை, விமானியின் தவறு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடை பெற்ற நிலையில், தற்போது விபத்திற்கான காரணம் குறித்த விரிவான அறிக்கையை ஒன்றிய பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங்கிடம் தாக்கல் செய்துள்ளது.  வரும் காலத்தில் இதுபோன்று ராணுவ ஹெலிகாப்டர் மற்றும் வி.ஐ.பி.க்கள் பயணிக்கக் கூடிய விமானங்கள் உள்ளிட்டவை விபத்து நடைபெறாமல் இருப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரையும் விரிவாக தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.