states

img

ராஜஸ்தானில் பழங்குடி இளைஞர் விசாரணைக் காவலில் அடித்துக்கொலை

ராஜஸ்தானில் பழங்குடி இளைஞர் விசாரணைக் காவலில் அடித்துக்கொலை

ஆதிவாசி அதிகார் ராஷ்டிரிய மஞ்ச் கடும் கண்டனம்

ஜெய்ப்பூர் பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் பழங்குடி இளைஞர் விசார ணைக் காவலில் அடித்துக் கொல் லப்பட்ட சம்பவத்திற்கு ஆதிவாசி அதிகார் ராஷ்டிரிய மஞ்ச் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆதிவாசி அதிகார் ராஷ்டிரிய மஞ்ச்சின் தலை வர் ஜிதேந்திர சவுத்ரி (திரிபுரா எதிர்க்கட்சித் தலைவர்), தேசிய ஒருங்கிணைப்பாளர் புலின் பிஹாரி பாஸ்கே ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “ராஜஸ்தான் மாநிலம் துங்கர்ப் பூர் மாவட்டத்தின் கலரியா கிரா மத்தைச் சேர்ந்த 22 வயது பழங்குடி இளைஞர் திலீப் அஹா ரியின் விசாரணைக் காவல் படு கொலையை ஆதிவாசி அதிகார் ராஷ்டிரிய மஞ்ச் (ஏஏஆர்எம்) கடுமையாகக் கண்டிக்கிறது.  செப்டம்பர் 26ஆம் தேதி திருட்டுக் குற்றச்சாட்டில் திலீப் கைது செய்யப்பட்டு, தொளடா காவல் நிலையத்தில் மிருகத்தன மாகச் சித்ரவதைக்கு உட்படுத் தப்பட்டார். படுகாயமடைந்த திலீப்  முதலில் துங்கர்ப்பூர் மாவட்ட மருத்துவமனையிலும், பின்னர் உதய்ப்பூரின் ஆர்.என்.டி மருத்து வக் கல்லூரி மருத்துவமனையிலும் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி செப் டம்பர் 30ஆம் தேதி உயிரிழந்தார். நாட்டில் பழங்குடிகளுக்கு எதிரான குற்றங்கள் படுமோசமாக அதிகரித்து வருகிறது. இதற்கு திலீப் அஹாரி மரணமும் ஒரு எடுத்துக்காட்டு ஆகும். குறிப்பாக தேசிய குற்றப் பதிவேடுகளின் சமீபத்திய அறிக்கையில், 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பழங்குடிகளுக்கு எதி ராக பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் 29 சதவீதம் அதிக ரித்துள்ளது. குறிப்பாக பாஜக ஆளும் மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநி லங்கள் பழங்குடிகளுக்கு எதிரான  குற்றங்களின் பட்டியலில் முத லிடத்தில் உள்ளன. 2022இல் ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் மட்டும் பழங்குடிகளுக்கு எதிரான பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளில் 54 சதவீதம் ஆக இருந்தன. இது கவ லையளிக்கும் விஷயம் ஆகும்.  உச்சநீதிமன்றம் கண்டனம் ஜூலை 2024இல் பாஜக ஆளும் மத்தியப்பிரதேசத்தில் நடந்த காவல் நிலைய மரண வழக்கில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் இருந்தும், பொறுப்பான காவல் அதிகாரிகள் கைது செய்யப் படவே இல்லை. கடந்த வாரம் குற்றம் சாட்டப்பட்ட காவல் அதி காரிகள் கைது செய்யப்படா விட்டால் சிபிஐ மற்றும் மத்தி யப்பிரதேச அரசுக்கு எதிராக அவ மதிப்பு நடவடிக்கை எடுக்கும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுக்க வேண்டியதாயிற்று. அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை யினரின் கைகளால் கூட பழங்குடி கள் தொடர்ந்து துன்புறுத்தப்படும் பாஜக ஆளும் மாநிலங்களின் நிலை மையையே இவை அனைத்தும் சுட்டிக்காட்டுகின்றன. போராட்டம் ஆதிவாசி அதிகார் ராஷ்டிரிய மஞ்சின் ஒரு அங்கமான ஆதிவாசி ஜனாதிகார் ஏக மஞ்சின் உறுப்பி னர்கள், திலீப் அஹாரியின் குடும் பத்தினருடன் உறுதியாக நின்று,  துங்கர்ப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் எதிர்ப்புப் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல  திலீப் அஹாரி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்களை  உடனடியாக கைது செய்யவும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு நியாயமான மற்றும் போதுமான இழப்பீடு வழங்கவும் ஆதிவாசி அதிகார் ராஷ்டிரிய மஞ்ச் கோரிக்கை விடுக் கிறது” என அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.