தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை
உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
தில்லியில் நாய்க்கடி மற்றும் ரேபிஸ் காரணமாக உயிரிழப்பு கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி உச்சநீதி மன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, “தில்லி, தில்லி மாநகராட்சி, என் எம்டிசி ஆகிய அனைத்து பகுதிகளில் இருந்தும், தெரு நாய்களை விரைவில் பிடிக்கத் தொடங்க வேண்டும். உடன டியாக அனைத்து பகுதிகளில் இருந்தும் தெரு நாய்களை கொண்டுவந்து காப்ப கங்களில் அடைக்க வேண்டும்” என உத்தரவிட்டனர். உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வெள்ளிக்கிழ மை அன்று நடைபெற்றது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட அமர்வு, “தில்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் பிடித்து காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை. அவற்றைப் பிடித்து கருத்தடை சிகிச்சை செய்து, புழுக்கள் நீக்க மாத்திரைகள் கொடுத்துவிட்டு அவை எங்கே பிடிக்கப்பட்டனவோ அங்கேயே விட்டுவிடலாம். அதே வேளையில், ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய்கள், ஆக்ரோஷமான தன்மையோடு இருக்கும் நாய்களை காப்பகங்களில் பராமரிக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.