புதுதில்லி, ஜுலை 8- கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் லிமிடெட் (கே-ஃபோன்) நிறுவனத்திற்கு உட் கட்டமைப்பு சேவைகளை வழங்குவதற் காக, உட்கட்டமைப்பு வழங்குநர் வகை 1 உரிமத்தை ஒன்றிய தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவின் பெருமைமிக்க திட்டமான கே-போனுக்கு செயல்பாட்டு அனுமதி கிடை த்துள்ளது. இந்த திட்டத்திற்கான இணைய சேவை வழங்குநர் உரிமம் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையம், மக்களின் உரிமை என்பதை அறிவிப்பதாகும் எல்.டி.எப் அரசின் கே-போன் திட்டம். ஏழைகளுக்கு இலவசமாகவும் பிற ருக்கு குறைந்த விலை மற்றும் தரமான அதிவேக இணையத்தை வழங்கும் இந்த திட்டம் தொலைத் தொடர்பு துறையில் கார்ப்பரேட் சக்திகளுக்கு எதிராக இடது சாரி அரசாங்கத்தின் மாற்றாகும்.