புதுதில்லி, டிச.29- 2021-ஆம் ஆண்டின் முடிவில், இந்திய பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள் ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 41 பேர் புதிதாக கோடீஸ்வரர்களாக உருவெடுத்துள்ளனர். 1 பில்லியனுக்கும்- அதாவது 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிக மாக சொத்து மதிப்பு கொண்டவர்கள் பெரும்பணக்காரர்களாக மதிப்பி டப்படுகின்றனர். இதன்படி 2020-ஆம் ஆண்டு நாட்டில் 85 பேர் பெரும்பணக் காரர்களாக இருந்தனர். ஆனால், 2021-இல் இந்த எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமன்றி, இந்திய பெரும் பணக்கார்களின் சொத்து மதிப்பும் கடந்த காலத்தை விட அதிகரித் துள்ளது. இந்திய பெரும்பணக் காரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 2020-இல் 494 பில்லியன் டாலர் களாக (சுமார் ரூ. 37 லட்சம் கோடி) இருந்தது. இது 2021-இல் 728 டாலர் களாக (சுமார் ரூ. 54 லட்சத்து 60 ஆயி ரம் கோடி) அதிகரித்துள்ளது. வேறு வகையில் சொன்னால், 2021-2022 நிதியாண்டிற்கு மதிப்பி டப்பட்டுள்ள நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பில் (ஜிடிபி) சுமார் 25 சதவிகித சொத்துக்களை 126 பெரும்பணக்கார்கள் மட்டும் வைத்துள்ளனர். இதுவே கடந்த ஆண்டு, இந்திய பெரும்பணக்கா ரர்களின் சொத்து மதிப்பு ஜிடிபி-யில் 18.6 சதவிகிதமாக மட்டுமே இருந் தது குறிப்பிடத்தக்கது. தற்போது அது 6.4 சதவிகிதம் அதிகரித்துள் ளது.
அம்பானி தொடர்ந்து முதலிடம்! அதானி 2 மடங்கு வளர்ச்சி..
ஆண்டு வருமானம் மற்றும் சொத்து மதிப்பு அடிப்படையில் தயா ரிக்கப்பட்டு வரும் பெரும்பணக் காரர்கள் பட்டியலில் 2021-ஆம் ஆண்டிலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியே தொடர்ந்து நாட்டின் முதல்பெரும் பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார். 2020-ம் ஆண்டில் அவரது சொத்து மதிப்பு 104.7 பில்லியன் டாலர்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அம்பானி யின் சொத்து மதிப்பு, 2019-ஆம் ஆண்டில் 37 சதவிகிதம் அதிகரித்தது. 2020-ஆம் ஆண்டில் 18.4 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்தது. ரிலை யன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மூல தனம் 2020 டிசம்பரில் ரூ. 12.81 லட்சம் கோடியிலிருந்து 25 சதவிகிதம் அதி கரித்து ரூ. 16 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது 2021-ஆம் ஆண்டிலும் அவரது சொத்து மதிப்பு 21.4 சதவிகிதம் அதிகரித்து உள்ளது. இதன் மூலம் அவர் தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
முகேஷ் அம்பானிக்கு அடுத்த இரண்டாவது இடத்தை, அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 82.3 பில்லியன் டாலர்களாக உள்ளது. 2020 டிசம்பரில் ரூ. 4.27 லட்சம் கோடியாக இருந்த அதானி குழுமத்தின் பட்டி யலிடப்பட்ட நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மூலதனம், 2021-இல் இதுவரை 133 சதவிகிதம் அதிகரித்து ரூ. 9.87 லட்சம் கோடி யாகி இருக்கிறது. இவர்களுக்கு அடுத்தபடியாக, ‘விப்ரோ’ நிறுவனர் அசீம் பிரேம்ஜி 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 37.1 பில்லி யன் டாலர்களாக உள்ளது. 2021-ஆம் ஆண்டில் அவருடைய சொத்து மதிப்பு 65.6 சதவிகிதம் அதிகரித்து உள்ளது. இதேபோல அவென்யூ சூப்பர் மார்ட்ஸ் தலைவர் ஆர்.கே. தாமனி 30.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 4-ஆவது இடத்தையும், எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார் 26.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 5-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.