states

img

இறந்த மகனின் உடலை தள்ளுவண்டியில் இழுத்துச்சென்ற தாய்

பாஜக ஆளும் உத்தரப்பிர தேசத்தின் மீரட் பகுதி யைச் சேர்ந்தவர் ராஜு. 30 வயதுமிக்க இளைஞரான இவர்  கடந்த செவ்வாயன்று அப்பகுதியில் உள்ள ஒரு மதுக்கடை அருகே இறந்து கிடந்தார். பல மணிநேரம் ஆகியும் ராஜு உடல் அப்படியே கிடந்தது. அவரது தாயும், தம்பியும்  அவரைத் தேடி அவரது உடலை கண்ட நிலையில், ராஜுவின் உடலை  சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல வாகன உதவியை நாடினர். ஆனால் பல மணி நேரம் ஆகியும் உடலை எடுத்துச் செல்ல எந்த வாகனமும் கிடைக்கப்பெறவில்லை. இதனால்  ராஜுவின் உடலை தள்ளுவண்டி யில் ஏற்றி அவரது தாயும், தம்பி யும் நீண்ட தூரம் கடந்து சுடுகாட்டுக்  குச் சென்றனர்.  செல்லும் வழியிலேயே இறுதிச் சடங்குகளைச் செய்ய சாலையில் வழிப்போக்கர்களிடம் நிதியுதவி கோரியுள்ளனர். ஆனால் எந்த உத வியும் கிடைக்காததால், மனமு டைந்த தாய்-மகன் இருவரும் உத விக்காக அருகிலுள்ள காவல் நிலை யத்தை அணுகினர். அங்கு பணியிலி ருந்த துணை ஆய்வாளர் அமித் குமார் மாலிக் என்பவர் நிதி திரட்டி  இறந்தவரின் இறுதிச் சடங்குகளை  செய்திட உதவி செய்தார். இளைஞர் உடலை தள்ளுவண்டியில் ஏற்றிச் சென்ற வீடியோ வைரலான பின்பே தொடர்ந்து மீரட் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி அகிலேஷ் மோகன் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.