states

img

புனிதமான மனுநீதியே இந்திய நீதித்துறைக்கு தேவை!

உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.அப்துல் நசீர் சொல்கிறார்

புதுதில்லி, டிச.28- “நாட்டின் சட்டங்களை இந்திய மயமாக்கும் காலகட்டம் தற்போது வந்திருப்பதாகவும், மனுநீதி உள் ளிட்ட பண்டைக்கால நீதி வழங்கும் முறையை இனிமேலும் புறக்கணிக்க முடியாது” என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ். அப்துல் நசீர் சர்ச்சை யைக் கிளப்பியுள்ளார். ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி-யின் மாநாட்டில், ‘இந்திய சட்ட அமைப்பின் காலனித்துவ நீக்கம்’ (‘Decolonisation of the Indian Legal System’) என்ற தலைப்பில் நீதிபதி எஸ். அப்துல் நசீர் உரையாற்றி யுள்ளார். அப்போதுதான் இவ்வாறு அவர் பேசியுள்ளார். இந்தியாவின் நீதித்துறை மிகவும் தொன்மையானது. அர்த்தசாஸ்திரம் (400 கிமு) மற்றும் 100 கி.பி.-யிலிருந்து மனுதர்ம சாத்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா நிர்வகிக்கப் பட்டு வந்தது.

தொடர்ச்சியான வெளி நாட்டு படையெடுப்பு மற்றும் அந்நி யர்களின் ஆதிக்கம் காரணமாக இந் திய நீதித்துறை பல்வேறு சிதைவு களுக்கு உள்ளானது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளைக் கடந்த போதிலும், இந்திய நீதித்துறை பிரித்தானிய இந்தியாவில் நிறுவப் பட்ட ஆங்கில சட்ட அமைப்பின் தொடர்ச்சியாகவே உள்ளது. காலனித் துவ மனநிலை முடிவுக்கு வர வில்லை” எனவே, இந்தியாவில் நீதித் துறை நிர்வாகத்தை காலனிய மனநிலையிலி ருந்து விடுவிக்கும் வகையில் சட்டக் கல்லூரிகளில் பண்டைய இந்திய நீதித் துறையை ஒரு பாடமாக அறிமுகப் படுத்த வேண்டும். நாட்டின் சட்ட நடை முறையை இந்தியமயமாக்க வேண்டி யது காலத்தின் தேவை ஆகும்.  சிறந்த வழக்குரைஞர்கள் மற்றும் நீதிபதிகள் பிறப்பிலேயே அவ்வாறு உருவாகி விடவில்லை; மாறாக, மனு, கவுடில்யர், காத்யாயனா், பிருஹஸ்பதி, நாரதா், பராசரா், யாக்ஞ வல்கியா் போன்ற இந்தியாவின் மிகப் பெரிய சட்ட ஆளுமைகளைப் போல சரியான கல்வி மற்றும் சிறந்த சட்ட மரபுகளால் உருவாக்கப்படுகின்றனா். அவர்களின் சிறந்த அறிவை தொடர்ந்து புறக்கணிப்பதும், அந்நிய காலனித்துவ சட்ட அமைப்பைக் கடைப்பிடிப்பதும் நமது அரசியல மைப்பின் இலக்குகளுக்கும், தேச நலன்களுக்கும் எதிரானதாகும். பண்டைய இந்திய சட்ட நடை முறையில், நீதி கோரும் பிரிவும் உள்ள டக்கியிருந்தது. ஆனால், தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் பிரிட்டிஷ் காலனித்துவ முறையில் நீதிபதி களை ‘லார்ட்ஷிப்ஸ்’, ‘லேடிஷிப்ஸ்’ என்று குனிந்து வளைந்து நீதி கேட்க வேண்டிய சூழல் உள்ளது.இவ்வாறு அப்துல் நசீர் பேசியுள்ளார்.