states

img

உத்தவ் ஆட்சியைக் கவிழ்க்க கரன்சியை அள்ளி வீசும் பாஜக

‘தேசியக் கட்சி நமக்கு உதவியாக உள்ளது’

எம்எல்ஏ-க்களிடம் ஏக்நாத் ஷிண்டே பேச்சு

மகாராஷ்டிராவில் நிலவி வரும் அரசியல் குழப்  பம் மற்றும் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ-க்களின் பின்னணியில் பாஜக இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். சூரத்திலி ருந்து கவுகாத்திக்குச் சென்ற சிவ சேனா எம்எல்ஏக்களுக்கு பாஜக  தலைவர்கள் பெரும் வரவேற்பே கொடுத்தனர். இந்நிலையில் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு தலைமை தாங்கிச் சென்றுள்ள அந்தக் கட்சியின் மூத்த தலைவ ரும், மகாராஷ்டிர நகர்ப்புற மேம் பாட்டுத்துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.  அதில், “நமது சுகத் துக்கங் கள் எல்லாம் ஒன்றுதான். நாம்  ஒற்றுமையாக இருந்தால் வெற்றி  நமக்குத்தான். ஒரு தேசிய கட்சி... மகாசக்தி... உங்களுக்கு தெரி யும்... அவர்கள் பாகிஸ்தானை வீழ்த்தியவர்கள். அவர்கள் நமக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து இருக்கின்றனர். அனைத்து உதவி களையும் செய்வதாக அறிவித் துள்ளனர்” என்று தங்களுக்குப் பின்னால் இருக்கும் பாஜக என்ற பூனைக்குட்டியை வெளியே விட்டுள்ளார்.

கவுகாத்தி, ஜூன் 24- எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்க ளில் எல்லாம் குதிரைபேரம் மூலம் எம்எல்ஏ-க்களை வளைத்து ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுவது பாஜக-வின் வழக்கமாகி விட்டது.  உத்தரகண்ட், கோவா, கர் நாடகா, மத்தியப் பிரதேசம், புதுச்சேரி  என பல மாநிலங்கள் அதற்கு சாட்சி யாக இருக்கின்றன. இந்த வரிசை யில், மகாராஷ்டிர மாநிலத்தில் உத் தவ் தாக்கரே அரசு மீதும் பாஜக தனது பிடியை இறுக்கியுள்ளது. ஆளும் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ ரெய்டு  மூலம் வழக்குகளைப் போட்டு நெருக் கடி கொடுத்த பாஜக, அனில் தேஷ்  முக், நவாப் மாலிக் ஆகிய 2 அமைச்  சர்களை கைது செய்து சிறையிலும் தள்ளியது.  அப்படியும் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர மாநில ‘மகா விகாஸ் அகாதி’ கூட் டணி அரசு மூன்றாண்டுகளை கடந்து  விட்ட நிலையில், உச்சகட்ட ஆத்தி ரத்திற்குச் சென்ற பாஜக, பல்வேறு அஸ்திரங்களையும் பயன்படுத்தி, தற்போது உத்தவ் தாக்கரே தானா கவே முதல்வர் பதவியை ராஜி னாமா செய்துவிட்டுப் போகும் நிலை யை ஏற்படுத்தியுள்ளது.

சிவசேனா கட்சிக்கு 55 எம்எல்ஏக்  கள் இருக்கும் நிலையில், அவர் களில் 35-க்கும் அதிகமானவர்களை குதிரைபேரம் மூலமாக உத்தவ் தாக்கரே-வுக்கு எதிராக திருப்பிய துடன், அவர்களை தங்களின் ஆட்சி நடக்கும் மாநிலங்களுக்கு ‘கடத்திச்’ சென்று வைத்துள்ளது. இவர்களை முதலில் குஜராத் மாநிலம் சூரத்திலுள்ள ‘லீ மெரி டியன்’ ரிசார்ட்டில் வைத்திருந்த பாஜக, தற்போது அசாம் மாநிலம் கவுகாத்தியிலுள்ள ‘ரேடிசன் புளூ’  என்ற ஸ்டார் ஹோட்டலில் தங்க வைத்துள்ளது. அங்கு அவர்களுக் காக பணத்தை தண்ணீராக வாரி இறைத்து வருகிறது. சிவசேனா எம்எல்ஏ-க்கள் தங்கி யுள்ள ரேடிசன் புளூ ஹோட்டலில் உள்ள தங்கும் அறைகளின் ஒரு நாள் வாடகை மட்டும் ரூ. 8 லட்சம்  என்று விவரங்கள் வெளியாகியுள் ளன. 

ரேடிசன் புளூ ஹோட்டலில் மொத்தம் 196 அறைகள் உள்ள நிலை யில், அவற்றில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மற்றும் சுயேட்சை எம்எல்ஏ-க்களுக்காக 70 அறைகள் புக் செய்யப்பட்டுள்ளன. இதன்படி ஒருநாளைக்கான அறை களின் வாடகைக்காக மட்டும் ரூ. 56 லட்சம் செலவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவசேனா எம்எல்ஏ-க்கள் கடந்த 7 நாட்களாக அங்கு தங்கியிருக்கின்றனர். இது வரை ரூ.4 கோடி வரை செலவாகி இருக்கிறது. இது தங்கும் அறை களின் வாடகைக்கான செலவு மட்டும்தான். உணவு உள்ளிட்ட பிற  செலவுகள் தனி. அவற்றையும் சேர்த்தால் அது 10 கோடி ரூபாயை நெருங்கும் என்று கூறப்படுகிறது. இதற்கெல்லாம் மேலாக ஆட்சிக் கவிழ்ப்புக்காக சிவசேனா எம்எல்ஏ-க்கள் எத்தனை கோடிகளுக்கு விலை பேசப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அதையும் சேர்த்தால் பல நூறுகோடி ரூபாய்கள் வரும்.  எனினும், மகாராஷ்டிர ஆட்சி யை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் என்பதற்காக, தன்னிடம் கொட்டிக் கிடக்கும் பணத்தை பாஜக  தண்ணீராக வாரி இறைத்து வரு கிறது.

உத்தவ் தாக்கரேவும் கவுகாத்தி ஹோட்டலுக்கு வரலாமாம்..

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சிவசேனா எம்எல்ஏ-க்கள்  35 பேரை ரேடியன் புளூ ஹோட்டலில்  பாஜக தங்க வைத்துள்ளது. இந்நிலை யில் இந்த ஹோட்டலுக்கு மகா ராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே வும் வரலாம் என்று அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கிண்டலடித்துள்ளார். “அசாமில் சிறந்த உள்கட்டமைப்புடன் கூடிய தரமான ஹோட்டல்கள் உள்ளன. தற்  போது எம்எல்ஏ-க்கள் வந்துள்ளது போல முதல்வர் உத்தவ் தாக்கரே வும் விடுமுறைக் காலத்தில் அசா முக்கு  வர வேண்டும்” என்று கூறியுள்  ளார்.

 

;