states

img

ஜம்மு-காஷ்மீரில் சிறந்த ஆட்சி நிர்வாகமா?

ஸ்ரீநகர், ஜன. 23- ஜம்மு-காஷ்மீருக்கு, சிறந்த மாவட்ட ஆட்சி நிர்வாக குறியீடு எனும் பட்டியலை ஒன்றிய உள்துறை அமைச்சர் வெளியிட்டிருப்பது மோசடித் தனமானது என முகமது யூசுப் தாரிகாரி விமர்சித்துள்ளார்.  இதுதொடர்பாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் ஜம்மு- காஷ்மீர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு மான முகமது யூசுப் தாரிகாமி கூறியிருப்ப தாவது: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு-காஷ்மீருக்கு ‘‘சிறந்த மாவட்ட நிர்வாக ஆட்சி குறியீடு பட்டி யல்’’ திட்டத்தை வெளியிட்டுள்ளார்.  சிறந்த நிர்வாக  ஆட்சியின் மிக முக்கிய உட்கூறு மக்க ளின் பங்கேற்பும் அவர்களின் பிரதிநிதித்துவமும் ஆகும்.

இந்த உரிமை ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.   காஷ்மீரில் கள நிலவரம் என்ன? உருக்குலைந்த சாலை கள்;தொடர் மின்வெட்டு;குடிநீர் வசதி இல்லாமை இவற்றுடன் பெரிய அள வுக்கு வேலையின்மையும் சமூக அமைதி யின்மையும் மக்களை துன்புறுத்து கின்றன. இவைதான் சிறந்த நிர்வாகத்து க்கான சாட்சியங்களா? இவற்றை சரி செய்ய இயலாத ‘‘நிர்வாக குறியீடு’’ வெறும் பொய் பிம்பம் கட்டமைக்கும்முயற்சிதான்! இவ்வாறு அவர் சாடியுள்ளார்.

;