states

img

வாக்காளர் பட்டியலில் இருந்து தேஜஸ்வி நீக்கம்

பீகாரில் பரபரப்பு

வாக்காளர் பட்டியலில்  இருந்து தேஜஸ்வி நீக்கம்

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள பீகார் மாநிலத்தில் பாஜக விற்கு ஆதரவாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில், எதிர்க்கட்சி ஆதரவாளர்கள், தலித், பழங்குடி மற்றும் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினர் என 65  லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கி, புதிய வாக்காளர்கள் பட்டி யலை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வரைவு வாக்காளர் பட்டியலில் பீகார் எதிர்கட்சித் தலைவரும், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித் தலைவருமான தேஜஸ்வியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் தேஜஸ்வி கூறுகையில், ”பீகாரில் தேர்தல் ஆணையம் வெளி யிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லை. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது கணக்கெடுப்பு படிவத்தை நான் நிரப்பி கொடுத்தேன்.  பட்டியலில் பெயரே இல்லாதபோது நான் எப்படி தேர்தலில் போட்டியிட முடியும்? என்னுடைய வாக்காளர் அட்டை எண்ணைக் கொண்டு விவரங்க ளைத் தேடிய போது எதுவுமே கிடைக்க வில்லை. பூத் லெவல் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் என்னுடைய படிவத்தை வாங்கிச் சென்றார்கள். எனினும் பட்டியலில் என்னுடைய பெயர் இல்லை. ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மொத்த எண்ணிக்கையில் சுமார் 8.5% பேர் அதாவது 65 லட்சம் பெயர்கள் பட்டிய லில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள், வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டார்கள், போலி வாக்காளர் அட்டை என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. தேர்தல் ஆணை யம் வழங்கியுள்ள நீக்கப்பட்டவர்களின் பட்டியலில் முகவரி, பூத் எண், வாக்கா ளர் அடையாள அட்டை எண் என எதுவும் இல்லை. இதனால் யார் பெயரை எல்லாம் நீக்கியிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடிய வில்லை” என குற்றம் சாட்டினார். பதற்றத்தில் தேர்தல் ஆணையம் தேஜஸ்வி புகார் அளித்த சில மணிநேரத்திலேயே, புதிய வரைவு வாக்காளர் பட்டியலில் இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும் இதுதொடர்பாக தேஜஸ்வியின் வாக்காளர் புகைப்படத்தையும் வெளி யிட்டுள்ளது. ஆனால் இது உண்மை அல்ல என ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மழுப்பல் மேலும் இதற்கு பதிலளிக்கும் விதமாக தேர்தல் ஆணையம் மறுப்பு  தெரிவித்துள்ளது. அதில் வெள்ளிக் கிழமை அன்று வெளியிடப்பட்ட பீகார் வரைவு வாக்காளர் பட்டியலில் தேஜஸ்வி பெயர் உள்ளது. அவர் தனது பழைய  எபிக் (EPIC) எண்ணை வைத்து தேடியதால் அவரால் தனது பெயரை கண்டுபிடிக்க முடியவில்லை. புதிதாக வழங்கப்பட்ட எபிக் எண் – RABO456228 மற்றும் சீரியல் எண்  416இல் தேஜஸ்வியின் பெயர் இடம் பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் மழுப்பலாக தெரிவித்தது.