states

img

இந்தி டப்பிங்குடன் வடநாட்டிலும் வைரலாகும் ‘ஜீ தமிழ்’ வீடியோ!

புதுதில்லி, ஜன.20- தமிழ்த் தொலைக்காட்சி சேனலான ‘ஜீ தமிழ்’ (ZEE TAMIL) ரியாலிட்டி ஷோ வில் பங்கேற்ற இரண்டு சிறுவர்கள், ‘வைகைப் புயல்’ வடிவேலுவின் இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படப் பாணியில் நாடகம் ஒன்றை நடத்திக் காட்டினர். அதில் ஒரு நாட்டின் மதிகெட்ட மன்ன னால் மக்கள் படும் துயரங்களை நகைச் சுவையுடன் அம்பலப்படுத்தி இருந்தனர். மன்னரும் அமைச்சரும் பேசிக் கொள்வது போல் இடம்பெற்ற அந்த நாடகக் காட்சியில், “நமது நாட்டு வளர்ச்சிக்கு கறுப்புப் பணம்தான் தடையாக உள்ளது. அதனால் எல்லா பணத்தையும் செல்லாது என்று அறி விக்கப் போகிறேன்” என்று கூறிவிட்டு, “அப்படி செஞ்சா கறுப்பு பணம் ஒழிஞ்சி டும்ல..’’ என்று மன்னர், அமைச்சரைப் பார்த்துக் கேட்க, அதற்கு அமைச்சர்... “இதே மாதிரிதான் ஒரு சம்பவம்... சிந்தியாங்குற நாட்டுல நடந்துச்சு. அந்த மன்னரும் உங்களை மாதிரித்தான் முட்டாள் தனமா பண்ணினாரு’’ என்கி றார்.

அதற்கு மன்னர், “கறுப்பு பணத்தை ஒழிச்சிட்டாரா?’’ என்று கேட்க, “கறுப்புப் பணத்தை எங்க ஒழிச்சாரு..? கலர் கலரா கோட் மாட்டிக்கிட்டுத்தான் சுத்து னாரு..!’’ என்று அமைச்சர் பதிலளிக்கிறார். அடுத்ததாக “நமது ஆட்சியில் மக்களை சந்தோசமாக வைப்பதற்கு நாம் என்ன செய்வது?’’ என்று மன்னர் கேட்க, “நாம ஆட்சியில இல்லேன் னாலே மக்கள் சந்தோசமாகத்தான் இருப்பாங்க’’ என்கிறார் அமைச்சர். இதைக்கேட்டு மன்னர் கோப மாகவே, “பின்னே என்ன மன்னா.. முன்பு அயல்நாட்டினரிடம் அடிமையாக இருந்தோம். இப்போது அயல்நாட்டு (அவ்வப்போது சொந்தநாட்டிற்கு வந்துசெல்லும்) மன்னரிடம் அடிமை யாக இருக்கிறோம். மக்களின் குறை களை நீங்கள் கேட்டால்தானே..’’ என்று அமைச்சர் சமாளிக்கிறார்... உடனே மன்னர், “நான் இப்போது தான் நகர்வலம் சென்று வந்தேன். மக் கள் எல்லோரும் செல்பி எடுத்துக் கொண்டு சந்தோசமாகத்தானே இருந்தார்கள்’’ என்று கூற, “மன்னா நம் நாட்டில் சென்றால்தான் அது நகர்வலம். நாடு நாடாக சென்றால் அது ஊர்வலம். அங்கேயெல்லாம் உங்கள் ஆட்சி நடக்கவில்லை அல்லவா...

அதனால்தான் மக்கள் சந்தோசமாக இருந்திருப்பார்கள்’’ என்று அமைச்சர் கூறுகிறார். “அது சரி மன்னா.. ஏன் லாபத்தில் உள்ளதை விற்கிறீர்கள்?’’ என்று இந்தமுறை அமைச்சரே கேள்வி கேட்க, அதற்கு பதிலளிக்கும் மன்னர், “என்ன அமைச்சு.. நஷ்டத்தில் உள்ளதை விற்றால் நாம எப்படி ‘லாபம்’ பார்க்க முடியும்?’’ என்று கூறுகிறார். இறுதியாக, “சரி வாங்க நாம நகர் வலம் செல்வோம்...” என்று கூறும் மன்னர், “ஆனால். இப்படியே சென்றால் மக்களை நம்மைகண்டு பிடித்து விடு வார்களே..” என்று கூறுகிறார்.. அதற்கு அமைச்சர்... “வடநாட்டில் செல்லும் போது மட்டும் மாறுவேடத்தில் செல்லுங் கள்...” என்று சொல்ல... மன்னரோ “அப்படியானால் தென்னாட்டில்...?” என்று கேள்வி எழுப்புகிறார்... அதற்கு “தென்னாட்டில் நீங்கள் மன்னராக சென்றாலே யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்’’ என்று அமைச்சர் கூறு கிறார்.

இந்த நாடகத்தில், பிரதமர் நரேந் திர மோடியின் பெயரை நேரடியாக குறிப்பிடாத அதேநேரத்தில், அவரின் பணமதிப்பு நீக்கம், தனியார் மயம் நட வடிக்கைகள் நையாண்டி செய்யப்பட்டி ருந்தன.  தமிழ்நாட்டின் சமூகவலைதளங் களில் இந்த டிவி ஷோ, பெரும் வைர லான நிலையில், சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. இந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வருகிறது. இதனிடையே, தமிழில் வெளியான இந்த டிவி நிகழ்ச்சி, தற்போது ஹிந்தி யில் மொழியாக்கம் (டப்பிங்) செய்யப் பட்டு, வடமாநிலங்களிலும் வைரலாகத் துவங்கியுள்ளது. ஐந்து மாநிலத் தேர்தல் நடக்கும் நேரத்தில் இது பாஜக தலை வர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

;