states

img

வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருந்தால் கடும் நடவடிக்கை தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருந்தால் கடும் நடவடிக்கை

தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தலைமை தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டது. இதன் விளைவாக சுமார் 65.2 லட்சம் வாக்காளர்களின் பெயர் கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. தேர்தல் ஆணையத்தின் இந்த நட வடிக்கையை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் பல வழக்குகள் தொடரப் பட்டன. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மிஸ்ரா, ஜாய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்திற்குப் பின் உச்சநீதிமன்ற நீதிபதிகள், “இவ்வழக்கில் ஏற்கனவே எதிர் உறுதி மொழி ஆவணம் தாக்கல் செய்யப் பட்டுள்ளதால், தேர்தல் ஆணையம் உள்ளிட்டோர் புதிய பதில் மனுக்க ளைத் தாக்கல் செய்யத் தேவை யில்லை. இவ்வழக்கு ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தொடர் விசார ணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அதற்கு முன்பாக, ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விரிவான உறுதிமொழி ஆவ ணத்தைத் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், வாக்காளர் பெயர் நீக்கத்தில் பெரும் எண்ணிக்கை யில் குளறுபடிகள் இருப்பது கண்ட றியப்பட்டால், உச்சநீதிமன்றம் கடுமை யாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும்” என்றும் தேர்தல் ஆணை யத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர்.