states

img

லாலு பிரசாத் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

லாலு பிரசாத்  மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

2004-2009 காலகட்டத்தில் ஒன்றிய ரயில்வே அமைச்சராக இருந்தவர் லாலு பிரசாத். அப்போது ரயில்வே துறையில் “குரூப்-டி”  பிரிவில் வேலைக்காக நிலத்தை லஞ்ச மாக பெற்றதாக ராஷ்டிரிய ஜனதாதள மூத்த தலைவரான லாலு பிரசாத்திற்கு எதிராக கீழமை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கும்படி லாலு பிரசாத் தாக்கல் செய்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செ ய்தது. இதனை எதிர்த்து லாலு பிரசாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில்,”இந்த விசாரணை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். சிபிஐ- யின் தற்போதைய விசாரணை என்பது ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 17 ஏ-வின் கீழ் அனுமதி பெறாத ஒன்றாகும். எனவே இந்த விசாரணையை ரத்து செய்ய வேண்டும்” என அவர் கோரியிருந்தார். இந்நிலையில்,லாலு பிரசாத்தின் மேல்முறையீட்டு மனு வெள்ளிக்கிழமை அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள்  எம்.எம். சுந்தரேஷ், கோட்டீஸ்வர் சிங் தலைமை யிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்திற்கு பின்பு உச்சநீதிமன்ற நீதிபதிகள்,”மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது. இந்த விவ காரத்தில் தற்போது தலையிட விரும்ப வில்லை. தில்லி உயர்நீதிமன்றம் வழக்கை மெரிட் அடிப்படையில் விசாரிக் கட்டும். வழக்கு விசாரணைக்காக லாலு பிரசாத் நேரில் ஆஜராவதிலிருந்து மட்டும் விலக்கு அளிக்கிறோம்” என மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.