states

img

8இல் ஒரு பங்கைக் கூட ஒதுக்கவில்லை கேரளத்திற்கு எதிரான அநீதியை நிறுத்துங்கள்! கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு

8இல் ஒரு பங்கைக் கூட ஒதுக்கவில்லை கேரளத்திற்கு எதிரான அநீதியை நிறுத்துங்கள்! கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு

திருவனந்தபுரம் முண்டக்கை - சூரல்மலை நிலச்சரிவு பேரிடரில் ஒன்றிய அரசு கேரளா வுக்கு எதிராக மேற்கொள்ளும் அநீதி மற்றும் புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டு வந்து, தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என கேரள  முதல மைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,”கேரள மாநிலம் வயநாடு அருகே மேப் பாடியில் ஜூலை 30, 2024 அன்று பேரிடர் (நிலச்சரிவு) ஏற்பட்டது. 10 நாட்களுக்குள், பேரிடரை மதிப்பிடுவதற்காக ஒரு ஒன்றிய அரசின் சார்பில் குழு வந்தது. மறு நாள், மாண்புமிகு பிரதமர் நேரில் வந்தார். தற்போது ஒரு வருடம் 2 மாதங்கள் கடந்து விட்டன. முதற்கட்ட மதிப்பீட்டை நடத்திய பிறகு, கேரளா ரூ.1202.12 கோடி அவசர உதவியைக் கோரியது. ஆனால், இதுவரை ஒன்றிய அரசு அவசர உதவி எதுவும் வழங்கப் படவில்லை. அதே போல பேரிடரில் பாதிக் கப்பட்டவர்களின் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரிய போதி லும், ஒன்றிய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதோடு, கடன்களை தள்ளுபடி செய்வதற்கு உதவியாக இருக் கும் தேசிய பேரிடர் மேலாண் மைச் சட்டத்தின் பிரிவு 13-ஐயும் நீக்கம் செய்தது. இந்தத் திருத்தத் தை மேற்கோள் காட்டி, முண்டக் கை - சூரல்மலை பேரிடரில் பாதிக் கப்பட்டவர்களின் கடன் தள்ளுபடி செய்ய சட்டம் அனுமதிக்காது என ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக கேரள உயர்நீதிமன்றத்தில் தெரி வித்துள்ளது. இரக்கமற்ற,  கொடூர அணுகுமுறை பேரழிவு ஏற்பட்ட உடனேயே, கேரளா தனது முதல் கோரிக்கை யை ஆகஸ்ட் 17, 2024 அன்று சமர்ப் பித்தது. இந்த கோரிக்கை மனுவு டன் கூடுதலாக, ஒரு பிஎன்டிஏ நடத்தப்பட்டு, நவம்பர் 13, 2024 அன்று விரிவான அறிக்கை சமர்ப் பிக்கப்பட்டது. பேரிடர் மேலாண் மைச் சட்டத்தின் பிரிவு 13 இந்த இரண்டு கட்டங்களிலும் அமலில் இருந்தது. இந்த ஆண்டு மார்ச் 29 அன்றுதான் ஒன்றிய அரசு இந்தப் பிரிவை நீக்கி ஒரு அரசா ணை வெளியிட்டது. இந்தத் திருத்தம் பின்னோக்கிச் செல்லும் விளைவை ஏற்படுத்தாது. இருப்பி னும், ஒன்றிய அரசு இனி உதவி வழங்க முடியாது என்ற கொடூர மான மற்றும் இரக்கமற்ற அணுகு முறையைக் கடைப்பிடித்துள்ளது. இதை மிகக் கடுமையான பேரிட ராக அறிவிக்க 5 மாதங்கள் ஆனது. இது சர்வதேச உதவிகளை சாத்தி யம் அற்றதாக்கியது. மதிப்பீடுகளின்படி மறுகட்ட மைப்பு உதவியாக ரூ.2221.03 கோடி தேவைப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை அன்று  ரூ.260.56 கோடி மட்டுமே அனு மதிக்கப்பட்டது. இந்தத் தொகை நமது உண்மையான தேவைகளில் எட்டில் ஒரு பங்கு கூட இல்லை. கேரளாவைப் புறக்கணிக்கும் முடிவுக்கு எதிராக அனைத்துத் தரப்பிலிருந்தும் போராட்டங்கள் எழுந்துள்ளன. அந்த எதிர்ப்புதான் முழு நாட்டின் உணர்வு. அதைப் புரிந்துகொண்டு, மாநிலத்தின் உரி மைகளையும், பேரிடரால் பாதிக் கப்பட்ட மக்களையும் பாதுகாப்பதி லும், அவர்களுக்குத் தகுதியான உதவிகளை வழங்குவதிலும் இனியும் தாமதிக்க வேண்டாம்” என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.