states

img

வீடு திரும்பினார் சோனியா காந்தி - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கங்கா ராம் மருத்துவமனை

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி (78) வயிறு தொடர்பான பிரச்சனை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு, ஜூன் 15ஆம் தேதி தில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலை சீரான தால் சில தினங்களுக்கு முன் அவர் வீடு திரும்பினார். இந்நிலையில், 17ஆம் தேதி அவருக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் அவர் கங்கா ராம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சில ஊடகங்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் சோனியா காந்தியின் உடல்நிலை தொடர்பாக தவறான தகவல் வெளியாகியது.  இதனைத் தொடர்ந்து இரண்டு நாள் சிகிச்சைக்கு பிறகு வியாழக்கிழமை யன்று மதியம் சோனியாகாந்தி டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார். சோனியா காந்தியின் உடல்நிலை தொடர்பான வதந்திகளுக்கு கங்காராம் மருத்துவ மனை சிகிச்சை மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.