states

img

லே மாவட்டத்தில்  3ஆவது நாளாக  நீடிக்கும் ஊரடங்கு சோனம் வாங்சுக் கைது

லே மாவட்டத்தில்  3ஆவது நாளாக  நீடிக்கும் ஊரடங்கு சோனம் வாங்சுக் கைது

புதன்கிழமை அன்று யூனியன் பிரதேசமான லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி லே நகரில் நடை பெற்ற போராட்டத்தில் திடீரென வன் முறை வெடித்தது. இந்த வன்முறைச் சம்ப வங்களில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.  பாதுகாப்புப் படையினரால் வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டாலும், தொ டர்ந்து பதற்றம் நீடித்து வருவதால் புதன்கிழமை மாலை லே மாவட்டத் திற்கு, அம்மாவட்ட ஆட்சியர் 163 தடை (ஊரடங்கு) உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று 3ஆவது நாளாக லே மாவட் டத்தில் ஊரடங்கு நீடித்து வருகிறது.  பாது காப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 5 பேருக்கு மேல் சாலைகளில் ஒன்றுகூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கைது லடாக்கில் இளைஞர்கள் வன்முறை யில் ஈடுபட சோனம் வாங்சுக்கின் பேச்சு தான் காரணம் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. இதற்கு எதிர்வினையாற்றிய சோனம் வாங்சுக்,“ஒன்றிய உள்துறை அமைச்ச கம் லடாக் வன்முறையில் என்னை பலிகடா ஆக்கப் பார்க்கிறது. தேசிய பாது காப்புச் சட்டத்தின் கீழ் என்னை கைது செய்ய ஆயத்தமாகிறார்கள். 2 ஆண்டு கள் என்னை சிறையிலடைக்க திட்டமிடு கிறார்கள். நானும் கைதாவதற்கு தயார் தான். வன்முறைக்கு, பிரச்சனை களுக்கும் என்னையோ அல்லது காங்கி ரஸ் கட்சியையோ குறை சொல்வதை கைவிட வேண்டும். இளைஞர்கள் ஏற்கெனவே விரக்தியில் உள்ளனர்” என்று கூறினார். இந்நிலையில், சோனம் வாங்சுக் அறிக்கை வெளியிட அடுத்த சில மணி நேரங்களில் (வெள்ளிக்கிழமை அன்று   பிற்பகல்) லடாக் காவல்துறை பரிந்துரை பேரில் காலநிலை ஆர்வலர் சோனம்  வாங்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். முன்னதாக லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து கோரி சோனம் வாங்சுக் 15 நாட்களாக உண்ணா விரதம் இருந்து வந்தார். இதற்கிடையே வாங்சுக் நிறுவிய எஸ்இசிஎம்ஒஎல் (SECMOL) என்ற அரசு சாரா நிறுவ னத்தின் வெளிநாட்டுப் பங்களிப்பு உரி மத்தை ஒன்றிய அரசு ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.