ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலை வருமான குலாம் நபி ஆசாத்தின் இளைய சகோதரர் குலாம் அலி, கடந்த 2009-ஆம் ஆண்டு பாஜக-வில் இணைந்தார். இந்நிலையில், குலாம் நபி ஆசாத்தின் மூத்த சகோதரரான லியாகத் அலியின் மகன் முபாஷிர் ஆசாத்தும், தனது ஆதரவாளர்களுடன், ஜம்மு - காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா முன்னிலையில் பாஜக-வில் இணைந் துள்ளார்.