states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி

உச்சநீதிமன்றத்திலேயே இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டிக்க வார்த்தைகள் போதாது. இது அவர் மீது மட்டுமல்ல, நமது அரசியலமைப்பின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். நீதிபதி கவாய் மிகவும் கருணையுள்ளவர். அதனால் ஒட்டுமொத்த தேசமும் அவருடன் ஒற்றுமையாக நிற்க வேண்டும்.

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் கருமலையான்

தினக்கூலி தொழிலாளர்களின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இது விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலைகளை விட பலமடங்கு அதிகம். 2023இல் மட்டும் 43,170 தினக்கூலி தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என தேசிய குற்றவியல் பதிவு நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த சத்தமில்லா சாவுகள் 2019க்கு பிறகு 45% அதிகரித்து உள்ளது.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே

உள்ளாட்சித் தேர்தல் நெருங்குவதால் மகாராஷ்டிராவுக்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளார். மராத்வாடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 50,000 இழப்பீடும், முழுமையான கடன்தள்ளுபடியும் அவர் செய்ய வேண்டும்.

தெலுங்கானா முன்னாள் எம்எல்சி கவிதா

தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது உச்சநீதிமன்றத்திற்குள்ளேயே தாக்குதல் நடத்தப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது. ஆனால் நீதிபதி பி.ஆர். கவாய் இந்த சம்பவத்திற்கு எவ்வாறு பதிலளித்தார், அவர் காட்டிய மரியாதை மற்றும் கண்ணியத்தை நாங்கள் பாராட்டுகிறோம். எனினும் இந்த தாக்குதலை வன்மையாகக்  கண்டிக்கிறேன்.