states

img

ஊழலை வெளிக்கொண்டுவர முயற்சித்த ஆர்டிஐ ஆர்வலர் சுட்டுக்கொலை

புதுதில்லி, ஜுலை 6- மத்தியப் பிரதேச  மாநிலம் விதி ஷாவில்  ரஞ்சித் சோனி என்பவர் கடந்த ஜூன் 2 அன்று பட்டப்பகலில் பொதுப்பணி துறை அலுவலகம் முன்பு அடையாளம் தெரியாத நப ரால் தலையில் சுடப்பட்டு கொல்லப் பட்டார். ஜூன் 19, அன்று அஞ்சலி பரத் வாஜ், ரோலி சிவரே, அஜய் டூபேய், அம்ரிதா ஜோசி, சந்தோஷ் மால்வியா உள்ளிட்டோர் அடங்கிய தகவல் அறியும் குழு, சோனியி னுடைய படுகொலை குறித்தும்  அவ ரால் வெளியிடப்பட்ட அவர் துறை  சார்ந்த ஊழல் புகார்கள்  தொடர்பான செய்திகளை சேகரிக்க விதிஷா சென்றது. அந்தக்குழு சோனியின் மனைவி மற்றும் குழந்தைகளைவிதிஷாவில் உள்ள அவர்களது வீட்டில் சந்தித்தது. மேலும் சோனியின் வழக்கில் சட்ட ரீதியாக நீண்ட காலமாக உதவுகிற அவரது வழக்கறிஞர் மற்றும் இந்த வழக்கு குறித்து செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளரையும் சந்தித்தது.  ரஞ்சித் சோனி பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரர்  

வேலை செய்திருக்கிறார் . அவர் துறை சார்ந்த பணிகள் தொடர்பான தகவலை பெறுவதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தொடர்ந்து விண்ணப்பங் கள் அனுப்பி இருக்கிறார். அவரால் தாக்கல்  செய்யப்பட்டு, பெறப்பட்ட தகவலின் அடிப் படையில் அரசாங்கத்தின் நிதியில் ஊழல் நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக சோனி லோக் ஆயுக்தா, பொதுப்பணித்துறை அலுவலகம் மற்றும் முதலமைச்சர் அலுவலகம் வரை புகார் அளிக்கப்பட்டிருப்பதாக உண்மை அறியும் குழு தனது விசாரணையின் அடிப்படையில் தெரிவித்திருக்கிறது.  விசாரணைக்கு உட்படுத்தி இருக்கிற ஜஸ்வந்த் ரகுவன்ஷி மற்றும் குமார் சௌபி ஆகிய இரு அரசு ஒப்பந்ததாரர்களோடு சோனி ஒப்பந்ததாரராக பணியாற்றினார். சில வருடங்களுக்கு முன்னால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சோனி, அவர்களோடு வேலை செய்வதை நிறுத்திக் கொண்டார் என்று சோனியின் மனைவி காயத்ரி குழுவிடம் தெரிவித்தார்.

அதன் படி குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஞ்சித் சோனி அரசாங்கத் திடம் இருந்து தகவல் பெறுவதற்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தொடர்ச்சி யாக பயன்படுத்தினார் என்பது தெளிவா கிறது. 130க்கும் மேற்பட்டமுறை  தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித் திருக்கிறார். அவற்றில் பல பொதுப்பணித் துறைக்கு தாக்கல் செய்யப்பட்டிருக் கின்றன. அவரால் விண்ணப்பிக்கப்பட்ட ஆர்.டி.ஐ. விண்ணப்பங்களின் ஆய்வுகள்  மூலம் பல வழக்குகளில் அவர்  நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள விண்ணப் பித்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 4-ன் கீழ் தகவலானது தேவைக்கேற்ப பொது அதிகாரிகளால் முன்கூட்டியே வெளிப் படுத்தப்பட்டிருக்க வேண்டும்” என்று குழு அறிக்கை கூறுகிறது. 

தொடர்ந்து மிரட்டல்

சோனி ஆர்.டி.ஐ விண்ணப்பத்தை திரும்பப் பெறக்கோரி ஒப்பந்ததாரர்களால் பல முறை மிரட்டலுக்கு ஆளாகியுள்ளார். மேலும் இதற்கு முன்பே பொதுப்பணித் துறை அலுவலகத்தில் அவர் தாக்கப்பட்ட தால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துறையில் புகார் அளித்த தாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். ரஞ்சித் சோனி தாக்கல் செய்த அனைத்து ஆர்டிஐ விண்ணப்பங்களையும், அதற்கான  பதில்களையும் பொது வெளி யில் அறிவிக்க வேண்டும். அவரால் விண்ணப் பிக்கப்பட்ட விசயங்கள் தொடர்பான  பல்வேறு புகார்கள் மீது முழுமையான  விசா ரணையை நடத்த வேண்டும்,  ஒப்பந்த தாரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு  இடை யிலான தொடர்பினை விசாரிக்கவேண்டும். ஒரு நிர்வாகத்தின் உறுப்பினர், அங்கு நடக்கக்கூடிய ஊழலை வெளியிடும் நபர் களுக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டம்  2014 இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. ஆனால் ஊழலை அம்பலப் படுத்தும் நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கு வதற்கு தேவையான விதிகளை ஒன்றிய அரசு  இன்றுவரை செயல்படுத்தப்பட வில்லை. எனவே மாநில அரசுகள் அந்த  சட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று குழுவின் அறிக்கை குறிப்பிடுகிறது.
 

;