states

தீக்கதிர் விரைவு செய்திகள்

பாஸ்டேக்கில் (FASTAG) ரூ.3,000 வருடாந்திர பாஸ் திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ஜார்க்கண்ட் மாநிலம் செரைகேலா-கர்ஸ்வான் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். பொதுமக்களிடம் பணம் பறித்த வழக்கில் பஞ்சாப்பில் ஆளுங்கட்சி எம்எல்ஏ ராமன் அரோரா (ஆம் ஆத்மி) கைது செய்யப்பட்டார். தெலுங்கானாவில் கடிதம் கசிந்த விவகா ரத்தில்,”என் தந்தை சந்திரசேகர ராவை (பிஆர்எஸ் தலைவர்) சுற்றியும் பேய்கள் சூழ்ந்துள் ளன” என சந்திரசேகர ராவ் மகளும் எம்எல்சியுமான கவிதா கூறியுள்ளார். இந்திய கடற்படை மற்றும் எல்லைப் பாது காப்புப் படை தொடர்பான முக்கிய தகவல்களை பாகிஸ்தான் முகவருடன் பகிர்ந்து கொண்ட குற்றச் சாட்டில் குஜராத் இளைஞர் கைது செய்யப் பட்டுள்ளார். கர்நாடகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், மக்கள் பீதியடைய அவசியமில்லை என்று கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலமான அசாமில் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என கூறப்பட்டு கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.