புதுதில்லி, நவ. 29 - மோடி அரசின் உதவியால், செவ்வாயன்று ஒரே நாளில் 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி அளவிற்கு அதானி குழுமப் பங்குகளின் மதிப்பு உயர்ந்துள்ளது. ‘ஹிண்டன் பர்க்’ அறிக்கை வெளி யான பின்னர், கடந்த 10 மாதங் களுக்கும் மேலாக, அதானி குழும பங்குகளின் வர்த்தகம் மந்தமாக இருந்து வந்த நிலையில், நவம்பர் 28 அன்று ஒரேநாளில் அதானி குழுமப் பங்குகள் 13 சதவிகிதம் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளன. பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதானி குழுமம் ரூ. 17 லட்சத்து 80 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் முறைகேடு செய்துள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஹிண்டன் பர்க் ரிசர்ச்’ என்ற ஆராய்ச்சி நிறு வனம், கடந்த 2023 ஜனவரியில் அறிக்கை வெளியிட்டது. இதனால், அதானி குழுமப் பங்குகளின் மதிப்பு பல லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வீழ்ச்சியைச் சந்தித்தது. உலகின் மூன்றாவது பணக்காரர் என்ற அளவிற்கு முன்னேறியிருந்த அதானி, ஒரே மாதத்தில் 38-ஆவது பணக்காரர் என்ற இடத்திற்குப் போனார். அதானியின் ஊழல் முறைகேடு கள் தொடர்பாக அடுத்தடுத்து, அதிர்ச்சிகரமான அறிக்கைகள் வெளியாகின. அதானியின் பங்கு கள் தொடர்புடைய மற்றும் வர்த்தகம் மேற்கொள்ளும் போலி நிறு வனங்கள் வினோத் அதானியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக, ஊழ லுக்கு எதிரான சர்வதேச அமைப் பான ஓசிசிஆர்பி (OCCRP), ‘தி கார்டி யன்’ பத்திரிகை ஆகியவை செய்தி வெளியிட்டன.
‘செபி’ மூலம் உண்மைகளை மறைத்த பாஜக அரசு
எனினும், இந்திய உச்ச நீதி மன்றத்தின் உத்தரவு பேரில் விசா ரணை நடத்திய- ஒன்றிய பாஜக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரி யமான ‘செபி’ (SEBI), அதானி யின் குழுமம் சொல்லிக்கொள்ளும் படியான ஊழல் எதையும் செய்ய வில்லை என்பதாகவே உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றம் அமைத்த வல்லுநர் குழு, ‘செபி’ நிர்வாகம் ஆகிய இரண்டிலும் அதானிக்கு மிகவும் நெருக்கமானவர்களே இருக்கிறார்கள்- அவர்கள் அதானி க்கு உதவியிருக்கிறார்கள் என்று பகிரங்கமாகவே குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டும் அவை கண்டு கொள்ளப்படவில்லை.
உச்சநீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு?
‘செபி’-யின் அறிக்கையை மட்டுமே ஆதாரமாக பார்க்கும் உச்சநீதிமன்றமும், “வெளிநாட்டு அறிக்கைகளை நாம் ஏன் உண்மை என எடுத்துக் கொள்ளவேண்டும்?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தது. இது தொடர்பான வழக்கில் தீர்ப்பை தற்போது ஒத்திவைத்துள்ளது. ஆனால், ‘செபி’ அமைப்பு அதா னிக்கு சாதகமாக நடந்து கொண்டி ருப்பதால், அதுவே தீர்ப்பிலும் எதிரொலிக்கும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்து ள்ளது. மோடி அரசு துணைக்கு இருக்கும்போது, அதானி குழுமம் தப்பித்து விடும் என பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். அதானி காட்டில் மீண்டும் அடைமழை துவங்கியது இந்தப் பின்னணியில், அதானி குழும பங்குகளுக்கு பங்குச் சந்தை யில் மீண்டும் அதிக வரவேற்பு கிடைக்கத் துவங்கியுள்ளது. அதானி பங்குகளின் விலை, செவ்வாயன்று ஒரே நாளில் 15 பில்லியன் டாலர் அதாவது ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ஏற்றம் கண்டுள்ளது. இதனால் 10 மாதத்திற்குப் பிறகு அதானி காட்டில் மீண்டும் அடைமழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.