states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆர்ஜேடி மூத்த தலைவர் லாலு பிரசாத்

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் கீழ் நாட்டில் நிலவும் சூழல், அவசரநிலை காலத்தைவிட மோசமானது ஆகும். பீகாரை காப்பாற்ற திருடர்களையும் பாஜகவையும் விரட்ட வேண்டும். ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

தேர்தல் ஆணையம் அரசாங்கத்தின் முகவராக மாறிவிட்டது. நரேந்திர மோடி மிகவும் ஆபத்தான மனிதர், அவர் பதவி நீக்கம் செய்யப்படாவிட்டால் மக்கள் வாக்குகள் பாதுகாப்பான கைகளில் இருக்காது. மக்கள்  அனைவரும் ஒற்றுமையாக இருந்தால், பீகாரிலும் மத்தியிலும் விரைவில் அரசு மாறும்.

தேசியவாத காங்கிரஸ் (சரத்) மூத்த தலைவர் ஜிதேந்திர அவ்ஹாத்

வாக்கு மோசடி தொடர்பாக ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்கத் தவறிவிட்டது. 2024 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் வாக்குகளைத் திருடி தான் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதன் ஒரே ஆதாரம் மகாராஷ்டிராவில் வாக்குப்பதிவின் கடைசி நேரத்தில் 76 லட்சம் வாக்குகள் அதிகரித்தது தான்.

திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ்

வாக்களிக்கும் பெண்களின் சிசிடிவி வீடியோக்களை தேர்தல் ஆணையம் பகிர வேண்டுமா? என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கேட்கிறார். ஞானேஷ் குமார் அவர்களே! சிசிடிவி கேமராக்களை வைப்பதற்கு முன் பெண்களிடம் அனுமதி வாங்கினீர்களா? வாக்குச்சாவடி என்பது உடை மாற்றும் அறை இல்லை. உங்கள் வசதியான சாக்குப் போக்குகள் எங்களுக்குத் தேவை இல்லை.