ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி
பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்தில் தொடர்ச்சியாக கொலை சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் பீகாரின் சாலைகள் இரத்தத்தால் சிவப்பு நிறத்தில் உள்ளன. மாநிலத்தில் நிகழும் குற்றச்சம்பவங்கள் துணை முதலமைச்சர்களின் (சாம்ராட், விஜய்) இல்லங்களில் இருந்து திட்டமிடப்படுகின்றன. அவர்கள் தான் குற்றவாளிகள்.
காங்கிரஸ் மூத்த தலைவர் அலோக் ஷர்மா
தேர்தல் ஆணைய செயல்பாடு குறித்து கடும் விமர்சனங்களும் கேள்விகளும் எழுந்து வருகின்றன. பாஜகவுடன் இணைந்து வாக்குத் திருட்டில் ஈடுபட்டவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஓய்வு பெற்ற அதிகாரிகளாக இருந்தாலும், நாட்டிலிருந்து தப்பி சென்றிருந்தாலும், அவர்கள் அனைவரும் விசாரணைக் கூண்டில் நிச்சயமாக நிறுத்தப்படுவார்கள்.
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி
அம்பேத்கர் ஓர் அறிஞர் என்பதை சாமியார்கள் புரிந்து கொள்ள வேண்டும். அம்பேத்கர் குறித்து சாமியார்கள் பேசும் எதுவும் அவரது மேதைமைக்கு அருகே கூட வர முடியாது. ஒன்றும் தெரியாமல் பேசுவதை விட, பேசாமல் இருப்பதே அவர்களுக்கு நல்லது.
திரைக்கலைஞர் சோனு சூட்
பஞ்சாப் மாநிலம் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. எனது குழு ஏற்கனவே அங்கு உள்ளது. பீகாரின் பல பகுதிகளும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக நான் அறிந்தேன். மேலும் பாதிக்கப்பட்ட இடங்களின் பட்டியலைக் கோரியுள்ளேன். இதனால் தேவைப்படுபவர்களுக்கு உதவி அனுப்ப முடியும்.