states

நாட்டில் தீவிரமடையும் வேலையின்மை

நாட்டில் தீவிரமடையும் வேலையின்மை

 ஆண்டிற்கு 2 கோடி வேலை வாய்ப்பு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து பிரதமரானார் மோடி. ஆனால் மோடி பிரதமர் ஆன  பின்பு நாட்டில் வேலையின்மை மிக  மோசமான அளவில் உள்ளது. இந்நிலை யில், பாஜக ஆளும் மத்தியப்பிரதேச காவல்துறையில் காவலர் (கான்ஸ்டபிள்) ஆட்சேர்ப்பில் 7,500 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக அம்மாநிலத்தின் சுமார் 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த காவலர்  பணிக்கானக் குறைந்தபட்ச தகுதி உயர்நிலைப்பள்ளியின் 10ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும். ஆனால் விண்ணப்ப தாரர்களில் 52,000 முதுகலை பட்டதாரி கள், 33,000 பட்டதாரிகள், 12,000 பொறி யாளர்கள் மற்றும் 50 பிஎச்டி (முனைவர்)  பட்டம் பெற்றவர்கள் இடம்பெற்றுள்ள னர். இப்பணிக்கு முனைவர் உள்ளிட்ட பட்டதாரிகளும் விண்ணப்பித்திருப்பது மத்தியப் பிரதேசத்தில் மட்டுமின்றி, நாட்டில் வேகமாக அதிகரிக்கும் வேலையின்மையை காட்டுகிறது.