இந்து, பவுத்த, சீக்கிய மதங்களைத் தவிர மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் போலியாக எஸ்சி சான்றிதழ் பெற்றிருந்தால் அவை ரத்து செய்யப்படும் என்று மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
மதுபானக் கொள்கை விவகாரத்தில் சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேல் அமலாக்கத்துறையால் வெள்ளிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் பஸ்சிம் மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள பன்ஸ்தாலா ரயில் நிலையம் அருகே யானைகள் கூட்டம் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் இரண்டு யானை கன்றுகள் உள்பட 3 யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
மக்களவைத் தேர்தலுக்குப் பின் “இந்தியா” கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி அங்கம் வகிக்கவில்லை என கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
பீகார் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் மின்னல் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவிநீக்கம் செய்வது தொடர்பான தீர்மானம், வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளது. இத்தகைய சூழலில், உச்சநீதிமன்றத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.