ரஷ்ய எண்ணெய் வாங்குவதை குறைக்க ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு?
ரஷ்யாவிடம் அதிக கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி இந்திய பொருள் கள் மீது 50% வரியை விதித்துள்ளார் டிரம்ப். தொடர்ந்து அந்நாட்டின் முக்கிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ் நிப்ட், லுக்காயிலுக்கு டிரம்ப் தடை விதித் துள்ளார். ரஷ்யாவிடம் குறைந்த விலை க்கு கச்சா எண்ணெய் வாங்குவதால் பிரத மர் மோடியின் நெருங்கிய நண்பரான அம்பானியின் ரிலையன்ஸுக்கு பெரும் லாபம் கிடைத்து வந்தது. இத்தகைய சூழ்நிலையில், ரஷ்யாவின் ரோஸ் நெப்ட், லூக்காயில் நிறுவனங்கள் மீது டிரம்ப் விதித்த தடையால் ரிலையன்ஸு க்கு கடும் பாதிப்பு ஏற்பட் உள்ளதாக செய் திகள் வெளியாகியுள்ளன. இதனால் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை படிப்படியாக குறைக்க ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இனி மேல் எண்ணெய் வாங்கும் திட்டத்தை இந்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப சரிசெய்வோம் என ரிலையன்ஸ் அறிவித்துள் ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.