உமர் காலித் உள்ளிட்ட 10 பேரை விடுதலை செய்க : தில்லியில் போராட்டம்
தில்லி கலவர வழக்கில் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட உமர் காலித், ஷர்ஜீல் இமாம் உள்ளிட்ட 10 பேரை உடனடியாக விடுதலை செய்யக் கோரி தில்லியில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 10 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். செப்., 13ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தை ஊடகங்கள் மூடி மறைத்ததால் பொது வெளியில் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.