நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களைத் தர மறுப்பு
யாரும் கேட்கவில்லை என தேர்தல் ஆணையம் சால்ஜாப்பு
கார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற அச்சம் காரணமாக பாஜக, தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர் பட்டியலில் வரலாறு காணாத முறை கேட்டை நடத்தியுள்ளது. “வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்)” என்ற பெயரில் இதுவரை 65 லட்சத்திற்கும் அதிகமான தலித், பழங்குடி மற்றும் முஸ்லிம், கிறிஸ்தவர் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களின், வாக்குரிமையை தேர்தல் ஆணையம் பறித்துள்ளது. கடந்த ஜூலை 25ஆம் தேதி வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியை நிறைவு செய்து, பீகார் மாநி லத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியிட்டது. இதுதொடர்பாக இந்தியா கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் தகவல்களை தேர்தல் ஆணையம் வெளியிடக் கோரி ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆர்) உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றையும் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதி பதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புயான், கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு,”வரைவு வாக்கா ளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்க ளின் தகவல்களை வருகின்ற ஆகஸ்ட் 9ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் சமர்ப்பிக்க வேண்டும். அதில் என்னென்ன தகவல்கள் சேர்க் கப்பட்டுள்ளது அல்லது நீக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம்” எனத் உத்தரவிட்டது. தொ டர்ந்து தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அன்று (ஆக. 9) உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. அச்சம் பிரமாணப் பத்திரத்தில்,”65 லட்சம் வாக்காளர்க ளின் விவரத்தை யாரும் கேட்கவில்லை. வாக்கா ளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் நீக்கிய கார ணத்தை தெரிவிக்க வேண்டும் என்ற விதி சட்டத்தில் இல்லை. அதனால் மனுதாரர்கள் உரிமை கோர முடியாது. எந்தவொரு வாக்காளரும் முன்னறி விப்பின்றி நீக்கப்படமாட்டார்கள். அதற்கு முன்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டு கருத்துகள் கேட்கப்படும். ஆவணங்கள் வழங்க கால அவகா சம் கொடுக்கப்படும். எந்த ஒரு ஆவணமும் வழங்க முடியாமல் இருக்கும் வாக்காளர்களுக்கு உரிய ஆவணங்கள் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். தற்காலிகமாக புலம் பெயர்ந்தோர்க ளுக்காக 246 நாளிதழ்களில் இந்தி மொழியில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர்க ளுக்கு உதவ 2.5 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என தேர்தல் ஆணை யம் கூறியுள்ளது.