கோலாரில் அமெரிக்கா - இஸ்ரேலுக்கு எதிராக பேரணி
ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் மேற்கொண்டு வரும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்து கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று ‘மாபெரும் போர் எதிர்ப்புப் பேரணி’ நடைபெற்றது. அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய போராட்டத்திற்கு, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் விஜூ கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
