“இந்தியா” கூட்டணிக் கட்சிகளின் கிளர்ச்சியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு
விவாதிக்க அஞ்சும் மோடி அரசு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 21ஆம் தேதி தொடங்கியது. “இந்தியா” கூட்டணிக் கட்சிகளின் தொடர் கிளர்ச்சியால் மிரண்ட ஒன்றிய அரசு “ஆபரேசன் சிந்தூர்” தொடர்பாக இரண்டு நாட்கள் விவாதம் நடத்தியது. “ஆபரேசன் சிந்தூர்” தொடர் பாக மக்களவை மற்றும் மாநிலங் களவையில் “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்க ளின் சரமாரி கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்க முடியாமல் மோடி அரசு மழுப்ப லாக விளக்கம் அளித்தது. இந்நிலையில், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என்று கோரி “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் விவாதிக்க அஞ்சும் மோடி அரசு திசை திருப்பும் வேலையை மட்டுமே மேற்கொண்டு வருகிறது. இதனை கண்டித்து “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் வெள்ளிக்கிழமை அன்று காலை அவை தொடங்கியதும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். நண்பகல் 12 மணி வரை முதலில் மாநிலங்களவை ஒத்திவைக்கப் பட்டது. மீண்டும் “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் கிளர்ச்சியில் ஈடுபட அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் 4ஆம் தேதி காலை 11 மணிக்கு (திங்களன்று) அவையின் செயல்பாடுகள் மீண்டும் துவங்கும் என மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் சிங் அறிவித்தார்.