பலாத்கார வழக்கில் கைதான பஞ்சாப் எம்எல்ஏ தப்பியோட்டம்
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகி றது. சனூர் தொகுதி ஆளுங்கட்சி எம்எல்ஏவான ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா மீது பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து செவ் வாய்க்கிழமை அன்று ஹர்மீத் சிங்கை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது செல்லும் வழியில் (கர்னால்) தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து ஹர்மீத் சிங் காவல்துறையினர் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தி யுள்ளார். மேலும் அவரது கூட்டாளிக ளும் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காவல்துறை பிடியில் இருந்து ஹர்மீத் சிங் தப்பிச் சென்றார். ஹர்மீத் சிங்கை தேடும் பணியில் தனிப்படை ஈடுபட்டு வருகின்றனர்.