states

img

விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் - பாதுகாப்பு படை தடுத்து நிறுத்தம் 

விவசாய சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதனால், டெல்லிக்கு செல்ல விவசாயிகள் ஒன்று கூடி வந்தனர். இதனை அப்பகுதியில் இருந்த பாதுகாப்பு படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

போராட்டத்திற்காக டெல்லிக்கு செல்ல சண்டிகர்-டெல்லி நெடுஞ்சாலையில் விவசாயிகள் ஒன்று கூடினார்கள். இதனை அறிந்த பாதுகாப்பு படை அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.  ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் கூடியிருந்த விவசாயிகளை கலைக்க நீர் பீரங்கியை நிறுத்தியுள்ளனர்.

விவசாயிகளின் எதிர்ப்பு மத்தியில் ஏற்கனவே, பஞ்சாப்பில் ரயில் சேவை நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 25 பயணிகள் ரயில் மீண்டும் தொடங்கியுள்ளன. வேறு மாநிலங்களில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு வரும் ரயில்களின் எண்ணிக்கை 20 ஆகும். ஆனால், 5 மட்டுமே வந்து கொண்டுள்ளது. பஞ்சாப்பில் இருந்து ரயில் சேவைகள் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 56 சரக்கு ரயில்கள் பயன்பாட்டில் உள்ளன.

2020 ஆம்  ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசி நிறைவேற்றிய 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதன், தொடர்ச்சியாக பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். அத்தனையும் பாதுகாப்புத்துறை தடுத்து நிறுத்தியுள்ளனர். டெல்லியில் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.
 

;