states

img

கோடி கோடியாய் சம்பாதித்த உ.பி. பாஜக எம்எல்ஏ-க்கள்

லக்னோ, மார்ச் 4 -  உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் போட்டியிடும் சுயேச்சைகள் உள்ளிட்ட 301 எம்எல்ஏ-க்களின் சொத்து மதிப்பு, கடந்த 5 ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. ஜனநாயக சீா்திருத்தங்களுக் கான சங்கம்எ (The Association for Democratic Reforms - ADR) ன்ற அரசு சாரா தோ்தல் கண்காணிப்பு தன்னார்வ அமைப்பு, இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  கடந்த 2017-ஆம் ஆண்டு உ.பி. தேர்தலில் போட்டியிட்ட 301 பேரின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 5.68 கோடியாக இருந்த நிலையில், இப்போது அது ரூ. 8.87 கோடியாக உயா்ந்துள்ளது. குறிப்பாக, 2022 தோ்தலில் மீண்டும் போட்டியிடும் 284 எம்எல்ஏ-க்களின் சொத்து மதிப்பு 22,057 சதவிகிதம் வரை (அதாவது 220 மடங்கு) உயா்ந்துள்ளன.  சொத்து மதிப்பு உயா்ந்த எம்எல்ஏ -க்களின் பட்டியலில், ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் அதிதி சிங் உள்பட 5 எம்எல்ஏ-க்கள்தான் முதல் 5 இடங்களைப் பிடித்திருக்கின்றனா். இதில் அதிதி சிங்கின் சொத்து மதிப்பு கடந்த 2017-ஆம் ஆண்டில் ரூ. 13.98 லட்சத்திலிருந்து ரூ. 30.98 கோடியாக உயா்ந்துள்ளது.

இது 22,057 சதவிகித (220 மடங்கு) உயா்வாகும். கடந்த 2017-ஆம் ஆண்டு  சட்டப்பேரவைத் தோ்தலில் ரேபரேலி  தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டி யிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அதிதி சிங், பின்னர் பாஜக-வுக்குத் தாவினார். அதுபோல, முபாரக்பூா் தொகுதி மஜ்லிஸ் கட்சி வேட்பாளரான ஷா ஆலமின் சொத்து மதிப்பு, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 77.09 கோடியாக அதிகரித்துள்ளது. 2017-ஆம் ஆண்டு ரூ. 118.76 கோடியாக இருந்த அவருடைய சொத்து மதிப்பு, இப்போது ரூ.195.85 கோடியாக உயா்ந்துள்ளது. இவருக்கு அடுத்தபடியாக, பாஜக-வின் சாப்ரெளலி தொகுதியில் போட்டியிடும் சஹேந்தா் சிங் ரமலா வின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டு களில் மட்டும் ரூ. 46.45 கோடி கூடுத லாகியுள்ளது.

2017-ஆம் ஆண்டில் ரூ. 38.04 கோடியாக இருந்த அவரு டைய சொத்து மதிப்பு, தற்போது ரூ. 84.50 கோடியாக உயா்ந்துள்ளது. பூல்பூா் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் பிரவீன் படேலின் சொத்து மதிப்பு, 2017-ஆம் ஆண்டு ரூ. 8.26 கோடியாக இருந்தது, 2022-இல் ரூ. 40.26 கோடியாக உயா்ந்துள்ளது. கட்சி வாரியாக நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், பாஜக சார்பில் போட்டியிடும் 223 வேட்பா ளா்களின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக 59.87 சதவிகிதம் அளவுக்கும், சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடும் 55 வேட்பாளா்களின் சொத்து மதிப்பு சரா சரியாக 46.18 சதவிகிதம் அளவுக்கும், பகுஜன் சமாஜ் வேட்பாளர்களில் 8 பேரின் சொத்து மதிப்பு 47.42 சத விகித அளவுக்கும், காங்கிரஸ் வேட்பா ளர்களில் 10 பேரின் சொத்து மதிப்பு  10.88 சதவிகித அளவுக்கும் உயா்ந்துள்ளது.