states

img

ஒடிடி-யில் குதிக்கும் பிரசார் பாரதி

இந்தியாவில் ஹாட் ஸ்டார் டிஸ்னி பிளஸ், அமேசான், நெட்பிளி க்ஸ், ஜி 5, சோனி லைவ், வூட், ஜியோ சினிமா என பல்வேறு ஒடிடி ஆன்லைன் பிளாட்பார்ம்கள் உள்ளன. இந்த ஒடிடி ஆன்லைன் பிளாட்பார்ம்கள் மூலம் புதிய மற்றும் பழைய படங்கள், வெப் சீரிஸ், விளையாட்டு நேரடி நிகழ்வுகளை ஸ்மார்ட்போன்கள் மூலம் காணும் வசதி என பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளதால் தற்போதைய காலகட்டத்தில் ஒடிடி மிகவும் பிரபலமாக உள்ளது. இந்நிலையில், ஒன்றிய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி சார்பில் அர சுக்கு என பிரத்யேக ஒடிடி தளம் உருவா க்கப்பட்டு வருகிறது. பிரசார் பாரதியின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக வழ ங்கப்பட்டுள்ள ரூ.2,539.61 கோடியில் (குறிப்பிட்ட தொகையில்)அமைக்கப் படும்  இந்த ஒடிடி தளத்தின் வடிவமை ப்பு, மேம்பாடு, செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுக்காக இ-டெண்டர் வாயிலாக ஒப்பந்ததாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவதாகவும், நவம்பர் 1 அன்று இதற்கான பணிகள் தொடங்கும் என்றும், பிரசார் பாரதியின் ஒடிடி 2024 புத்தாண்டு தினத்தன்று நடைமுறைக்கு வரும் எனவும்  தகவல் வெளியாகியுள்ளது.