பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் பீகாரில் தாக்குதல் நடத்த திட்டமாம்
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தோல்வி பயத்தில் உள்ள பாஜக, தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் முறைகேடுகளை அரங்கேற்றியுள்ளது. இந்த விவகாரம் அம்பலமாகியுள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் மற்றும் பாஜகவிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பிரச்சனையை திசை திருப்புவதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பீகாரில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியுள்ளனர் என அந்த மாநிலத்தின் காவல் தலைமையகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில்,”தடை செய்யப்பட்ட அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத இயக்க உறுப்பினர்களான ராவல்பிண்டி நகரை சேர்ந்த ஹஸ்னைன் அலி, உமர்கோட் பகுதியைச் சேர்ந்த அடில் உசைன், பஹவல்பூரைச் சேர்ந்த முகமது உஸ்மான் ஆகிய 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளது. 3 பேரும் நேபாள நாட்டின் வழியே பீகாருக்குள் ஊடுருவி உள்ளனர். பீகார் மற்றும் நாடு முழுவதும் அவர்கள் பெரிய அளவில் தாக்குதலை நடத்த திட்டமிட்டு உள்ளனர்” என அதில் கூறப்பட்டுள்ளது. வாக்கு திருட்டு பிரச்சனையை திசை திருப்புவதற்காகவா?, “இந்தியா” கூட்டணிக் கட்சிகளின் வாக்கு உரிமை யாத்திரையை சீர்குலைப்பதற்காக பாஜகவின் சதித்திட்டமா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.